உளவியல் படிப்பு… வளமான எதிர்காலம்

ஜூலை 01-15

மனச்சோர்வு தொடங்கி சிந்தனைக் குறைபாடுவரை மனம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட நாம் ஆலோசனை பெறுவது… உளவியலாளர்களிடம்! மாறி வரும் உலகில் ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் (ஷிtக்ஷீமீss ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ) என்று, உடல் நோய்களுக்கு இணையாக மனநோய்களும் முன் எப்போதும் இல்லாத வகையில் பெருகி வருவதால், மருத்துவ உலகில் உளவியலாளர் களுக்கான தேவை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து நிறுவனங்களிலும் ஓர் உளவியலாளர் இருப்பது அவசியமாகிவிடும். இந்தச் சூழலில், உளவியல் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் விரியும் என்று சொல்லும் சென்னை, டி.ஜி வைஷ்ணவக் கல்லூரியின் உளவியல் துறை ஆசிரியர் மீனு சங்கீதா, உளவியல் படிப்பில் சேர்வதற்கான கல்வித்தகுதி, பாடத்திட்டங்கள், மேற்படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய ஆலோசனைகள் தருகிறார்.

கல்வித்தகுதி

பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவில் படித்தவர்களும் பி.எஸ்ஸி., உளவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மேற்படிப்பாக எம்.எஸ்ஸி., உளவியல் படிக்கலாம். அதில் மருத்துவ உளவியல் (Clinical Psychology),, ஆலோசனை உளவியல் (Counseling Psychology), செயல்முறை உளவியல் (Applied Psychology) பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படித்து, வேலைவாய்ப்பு பெறலாம்.

கல்வி நிறுவனங்கள்

பி.எஸ்ஸி., உளவியல் படிப்பு அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சென்னை மாநிலக் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, எஸ்.அய்.இ.டி கல்லூரி, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. எம்.எஸ்ஸி., உளவியல் படிப்பு சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாநிலக் கல்லூரி, எஸ்.அய்.இ.டி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. எம்.எஸ்ஸி., முடித்த பின், எம்.ஃபில் பட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது தேசிய மற்றும் மாநில தகுதித் தேர்வுகளுக்குத் தயாராகலாம்.

சிலபஸ்

பி.எஸ்ஸி., உளவியலில் மனித சுபாவங்கள் மற்றும் தனித்தன்மைகள் பற்றிய கோட்-பாடுகளை மாணவர்கள் பயில்வர். ஒரு மனிதனின் பிறப்பு முதல் முதுமை வரையிலான மூளை, மன வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள், மனிதர்களின் கவனிப்புத் திறன் மற்றும் அய்.க்யூ ஆகியவற்றைச் சோதிக்கும் முறைகள் கற்றுத்தரப்படும். நிறுவனங்களில் உளவியலின் தேவை, மனிதவள மேம்பாடு ஆகிய பேப்பர்களும் பாடத்திட்டத்தில் அடங்கும். எம்.எஸ்ஸி., உளவியலில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் சிறப்புப் பிரிவின் அடிப்படையில் பாடங்கள் அமையும்.

வேலைவாய்ப்புகள்

¨    பள்ளி, கல்லூரி மற்றும் இதர நிறுவனங்களில் ஆலோசகராக (Counselors) பணிபுரியலாம்.
¨    மருத்துவமனைகள், குடும்ப நீதிமன்றம் போன்றவற்றிலும் உளவியலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.
¨    சில பள்ளிகளில் உளவியலும் ஒரு பாடமாக பாடத்திட்டத்தில் இணைக்கப்-பட்டுள்ளது. அங்கு உளவியல் ஆசிரியர் பணியில் சேரலாம். அதற்கு எம்.எஸ்ஸி முடித்திருக்க வேண்டும்.

¨    கல்லூரியில் ஆசிரியராக, பிஹெச்.டி பட்டம் அல்லது தேசிய, மாநிலத் தேர்வுகளில் (NET/SLET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
¨    பொதுவாக ஆலோசகர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஆரம்ப சம்பளம் 20,000 முதல் 25,000 ரூபாய்வரை கிடைக்கிறது.
¨    உளவியல் படிக்கலாம், உறுதியாக வேலைவாய்ப்பு பெறலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *