கடந்த வாரம் எனது மொபைல் போனுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து மிஸ்டு கால் வந்தது. அது ஒரு பத்து இலக்க எண். முதல் நம்பர் இரண்டில் துவங்கியிருந்தது. இரண்டுக்கு முன் ‘+’ என்ற குறியீடு இருந்தது. புதிய நம்பராக இருந்ததால், பதிலுக்கு நானும் மிஸ்டு கால் கொடுத்தேன். அடுத்த நொடியே எனது மொபைல் அக்கவுன்ட்டில் இருந்து நாற்பது ரூபாய் போனதாக பேலன்ஸ் ரிப்போர்ட் வந்தது.
உடனே கஸ்டமர் கேரை தொடர்புகொண்டு விவரத்தைக் கூறினேன். அதற்கு எனக்கு கிடைத்த பதில்… ‘+’2_விலோ ‘+’3_யிலோ துவங்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் தந்தால்கூட பணம் போய்விடும்; இழந்த பணத்தைத் திரும்ப பெற முடியாது என்பதுதான். ‘அது ஒரு ஃப்ராடு கால், வெளிநாட்டிலிருந்து வருகிறது’ என பதில் கூறிய கஸ்டமர் கேர் நபர், ‘வேண்டுமானால் இந்த எண்ணில் புகார் தெரிவியுங்கள்’ என கூறி ஒரு எண்ணைத் தந்தார்.
அந்த எண்ணுக்கு பலமுறை தொடர்புகொண்டபோதும் இந்தியிலேயே பேசுகின்றனர்.
நான் பலமுறை எனக்கு இந்தி தெரியாது என ஆங்கிலத்தில் கூறியும் பலனில்லை. நொந்துபோய் விட்டுவிட்டேன். இதைப் படிக்கும் வாசகிகளே… எச்சரிக்கையாக இருங்கள்!
– கே.தீபிகா, சென்னை_116