வாழை இலையின் நடுத்தண்டு பகுதியைத் துண்டாக்கி, இட்லிமாவில் போட்டு-வைத்தால் புளிக்காது. மாவின் மேல் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினாலும் மாவு புளிக்காது. இட்லி, தோசை மிகவும் மென்மையாக இருக்கவும் இது உதவும்.
இட்லி மாவு புளித்துவிட்டால் அதில் கொஞ்ச தண்ணீர் ஊற்றி, அரை மணி நேரம் கழித்து, அந்த நீரை வடித்து விடுங்கள் பின்னால் ஊற வைத்த அவல், அல்லது ஜவ்வரிசி அல்லது பச்சரிசி மாவு, அல்லது கேழ்வரகுமாவு சேர்த்து வழக்கம் போல் ஊத்தப்பம் செய்யலாம், புதுச்சுவை மிளிரும்.
புளித்த மாவில் தேங்காய் அரைத்துப் போட்டு, உப்பு, ஆப்பசோட பச்சரிசி மாவு, நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றிக்கரைத்து உடனே ஆப்பம் செய்யலாம். புளிப்பு இருக்காது. பூப்போன்ற மென்மையான ஆப்பம் ருசிக்கும்.