¨ இந்தியாவிலேயே நகர எல்லைக்குள் தேசிய பூங்கா இருக்கும் ஒரே ஊர் சென்னைதான். கிண்டி தேசிய பூங்காதான் அந்தப் பூங்கா.
¨ இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆங்கிலேய ரெஜிமென்ட் சென்னை ரெஜிமென்ட்தான். இப்பொழுது இருக்கும் ராணுவத்தின் ரெஜிமென்ட்களில் மூத்த ரெஜிமென்ட் மெட்ராஸ் ரெஜிமன்ட் தான்.
¨ இந்தியாவின் முதல் ரேடியோ சேவை சென்னையில்தான் தொடங்கப்பட்டது. பிரசிடன்சி ரேடியோ க்ளப் என்கிற கிருஷ்ணஸ்வாமி செட்டியால் துவங்கப்பட்ட இந்த ரேடியோ சர்வீஸ் துவங்கிய ஆறு ஆண்டுகளுக்கு பிறகுதான் அரசே ரேடியோ சேவையை துவங்கியது. இந்த வருடத்தோடு அந்த ரேடியோ சேவை ஆரம்பித்து தொன்னூறு வருடங்கள் ஆகின்றன.
¨ இந்தியாவின் முதல் வங்கி, ஆளுனர் க்ரிபோர்ட் அவர்களால் 1682இல் துவங்கப்பட்ட மெட்ராஸ் வங்கிதான்.
¨ ஆசியாவின் முதல் கண் மருத்துவமனை அமைக்கப்பட்டது சென்னையில்தான்.
Madras Eye Infirmary என்று பெயர் கொண்ட அது உருவான வருடம் 1819!
¨ இந்தியாவின் முதல் நோக்ககம் எழுந்ததும் சென்னையில்தான். நுங்கம்பாக்கத்தில் இருநூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன் இது உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் திரிகோண அளவையியல் நடை-பெற்றது பரங்கி மலையில்!
¨ இந்தியாவிலேயே முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தது மெட்ராஸ் மாநகராட்சிதான்.
¨ இந்தியாவிலேயே முதன்முதலில் கோயில் நிலங்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறை உருவானதும் விடுதலைக்கு முந்திய நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான்.
¨ இந்தியாவின் மிக பழமையான பொறியியல் கல்விக்கூடம் கிண்டி பொறியியல் கல்லூரிதான். இந்தியாவில் மெக்கானிகல், எலெக்ட்ரிகல் ஆகிய துறைகளில் பொறியியல் பாடத்தை முதன்முதலில் ஆரம்பித்தது இங்கேதான்.
¨ இந்தியாவின் முதல் கார்ப்பரேசன் சென்னை கார்ப்பரேசன்தான். உலகின் இரண்டாவது பழமையான கார்ப்பரேசன் அதுதான். இது எழ காரணம் ரிப்பன். அவர் பெயரால் கட்டப்பட்டதுதான் ரிப்பன் கட்டிடம். ஸீ