1. பெண்களின் விடுதலைக்குப் பெரியார் சொல்லும் வழிமுறைகள் யாவை?
அ) கல்வி, வேலைவாய்ப்பு, பதவி, சொத்து ஆகியவற்றில் சமஉரிமை ஆ) மணமகனைத் தேர்ந்தெடுக்கவும் கருத்தடை செய்து கொள்ளவும் உரிமை இ) மணவிலக்குப் பெறவும் மறுமணம் செய்யவும் உரிமை ஈ) மேலே சொன்ன எல்லாமும்
2. இந்தியாவில் பொதுவுரிமைக்குத் தடையாக இருப்பது எது என்கிறார் பெரியார்? அ) பிறப்பில் ஏற்றத்தாழ்வும் இழிவும் பாராட்டும் ஜாதி அமைப்பு ஆ) மத நம்பிக்கை இ) அரசாங்க முறை ஈ) முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் ஆதிக்கம்
3. உயிர் என்பதைப் பற்றி பெரியாரின் விளக்கம் யாது?
அ) அதுவே ஆன்மா ஆ) அது காற்று இ) அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது ஈ) சரீரக் கூட்டு அமைப்பாலும், அதற்கு அளிக்கப்படும் உணவாலும் இயங்கிக் கொண்டு இருக்கும் தன்மையே உயிர்
4. பொதுத் தொண்டில் உள்ளவர்களுக்குப் பெரியார் கருத்தில் உரைகல்லாகப் பயன்படுவது யாது?
அ) சிறைத் தண்டனை பெறுவது ஆ) தொல்லையை ஏற்பது இ) பிறருடைய தூற்றுதலைச் சகிப்பது ஈ) புகழ் பெறுவது
5. வகுப்புரிமைக்காக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என பெரியார் கிளர்ச்சி செய்யக் காரணமான சூழல் யாது?
அ) வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு குறைவாக இருந்ததால் ஆ) இடஒதுக்கீடு செல்லாது என மத்திய அமைச்சரவை முடிவு செய்ததால் இ) இடஒதுக்கீடு செல்லாது என மாநில அமைச்சரவை முடிவு செய்ததால் ஈ) தொழில்படிப்புக் கல்லூரிகளுக்கு இடஒதுக்கீடு ஏற்பாடு செல்லாது என உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்ததால்
6. இராச கோபாலாச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து பெரியார் அவர்கள் வெற்றி பெற்ற ஆண்டு…..
அ) 1949 ஆ) 1960 இ) 1954
ஈ) 1965
7. புரட்சிக் கவிஞர் கடவுள், மதம்பற்றிப் பாடுவதை விட்டுவிடுவதற்குக் காரணமாக இருந்த பெரியார் அவர்களின் சொற்பொழிவு நடந்த இடம்
அ) திருச்சி ஆ) மயிலாடுதுறை
இ) தஞ்சை ஈ) சிதம்பரம்
8. பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறக் காரணமான நிகழ்ச்சி எது? அ) சேரன்மாதேவி குருகுலப் போராட்டம். ஆ) வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தை காங்கிரசு ஏற்க மறுத்தது. இ) வைக்கம் போராட்டத்தில் பெரியார் பெயரை இருட்டடிப்பு செய்து காந்தி கட்டுரை எழுதியதால் ஈ) கட்சிக்கட்டுப்பாட்டை மீறினார் என்று நீக்கப்பட்டார்.
9. யுத்தம் நடந்துகொண்டிருக்கும்போது சேனாதிபதி இறந்துபட்டதுபோல என்று எந்தத் தலைவரின் மறைவு குறித்து பெரியார் 16.12.1928இல் எழுதினார்?
அ) டி.எம்.நாயர் ஆ) சர். தியாகராயர் இ) பனகல் அரசர் ஈ) சர். ஏ.டி. பன்னீர்செல்வம்
10. கருத்தடையை (குடும்பக் கட்டுப்பாடு) ஆதரித்து கர்ப்ப ஆட்சி எனும் தலைப்பில் பெரியார் எழுதிய ஆண்டு எது?
அ) 1925 ஆ) 1928 இ) 1931 ஈ) 1940
விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்..