கந்த சஷ்டி?
ராம நவமி?
கிருஷ்ண ஜெயந்தி?
பிறக்காத கடவுள்களுக்கு
பிறந்த நாள்
கொண்டாட்டங்கள்…
– தமிழர் தலைவர் கி.வீரமணி
முட்டாள் தனத்தில் பிறந்து
அயோகியத்தனத்தில் வளர்ந்து
காட்டுமிரண்டித்தனத்தால்
நிலை நிறுத்தப்பட்டதுதான்
கடவுள் தத்துவம்!
– தமிழர் தலைவர் கி.வீரமணி
அக்னி பகவான்
கடவுளா, வேலைக்காரனா?
தீக்குச்சிக்கு!
வாயு பகவான்
நில்லென்றால் நிற்கிறார்.
ஓடு என்றால் ஓடுகிறார்.
மின் விசிறியில்!
– தமிழர் தலைவர் கி.வீரமணி
எங்கே சமூக அநீதி
இருக்கிறதோ
அங்குதான் சமூக நீதி
தேவைப்படும்
பட்டினி கிடப்பவன்
சோறு கேட்பதுதான்
சமூகநீதி!
பசியேப்பக்காரனுக்கும்
புளியேப்பக்காரனுக்கும்
இடையில் நடக்கும்
போராட்டம்தான்
சமூக நீதி!
– தமிழர் தலைவர் கி.வீரமணி
அன்பே உருவானவன்
ஆண்டவன் என்றால்?
அவன் கையில்
சூலாயுதம் எதற்கு?
வேர்க்கடலையைத் தோண்டவா?
– கவிஞர் கலிபூங்குன்றன்
முஸ்லீம்கள் கிருஷ்ணனை
வணங்க வேண்டும்.
கிறித்துவர்கள் ராமனை
வணங்க வேண்டும்
ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்
சொல்கின்றனர்.
அப்படியென்றால்
இவர்கள் அல்லாவையும்,
ஏசுவையும் வணங்கத்தயாரா?
– கவிஞர் கலிபூங்குன்றன்
மற்ற மதங்கள்
கடவுள்களைப் படைத்தன.
ஹிந்து மதம் மட்டும்தான்
கடவுளோடு சேர்த்து
ஜாதியையும் படைத்தது.
– செயலவைத் தலைவர்
சு.அறிவுக்கரசு
பிறக்கும் போதே
மூடநம்பிக்கை
தொடங்கிவிடுகிறது
ஜாதகம்!
– மருத்துவர் கவுதமன்
ஆதாமின்
எலும்பு ஏவாள்?
ஆசிரியர் சொன்னார்.
மாணவன் கேட்டான்.
ஆதாமின் எலும்பு
ஏவாள் என்றால்?
ஏவாள் ஆதாமுக்கு
மனைவியா?
சகோதரியா?அ
– பேரா.காளிமுத்து
பார்ப்பனர்களால்
பார்ப்பனர்களுக்காக
பார்ப்பனர்களாலேயே
எழுதிபுகுத்தப்பட்டதுதான்
பகவத்கீதை.
– பேரா.காளிமுத்து