நம் சிந்தனையிலும் புத்தகங்களிலும் பெண் என்பவள் தெய்வம். ஆனால், நடைமுறையில் அவள் ஓர் அடிமை. வீட்டில் வளர்க்கப்படும் விலங்கு.
அறிவு வழியே செல்பவன் உலகப் புகழ் பெறுவான். உணர்ச்சி வழியே செல்பவன் உலக மக்களால் இகழப்படுவான்.
வாழ்க்கை என்பது போர்க்களம். இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை. ஏனெனில், இவைதாம் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
கானல் நீரல்ல உலகம்; அது ஒரு கடல். அக்கடலில் நீந்துவதும், கரையேற முடியாதவர்களைக் கரை சேர்ப்பதுமே நமது வேலையாக இருக்க வேண்டும்.
கடந்து போன காலத்துக்காக அழுவதைவிட நிகழ்காலத்துடன் போராடுவதும் வருங்காலமாகிய மலை உச்சியில் ஏறுவதும்தான் மனிதனின் உண்மையான வீரத்தை வெளிப்படுத்துகிறது.
எழுந்தவுடன் மலர்ந்த பூ கண்ணில் பட்டதும், என்னுடைய இன்றைய பொழுதும் இப்படித்தான் மலரப் போகிறது, நகைக்கப் போகிறது, நறுமணம் கமழப் போகிறது என்று நினைப்பேன்.
வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது. மனிதனின் விதி அவனுடைய தலையெழுத்தில் இல்லை; அவனுடைய மன வலிமையிலேதான் இருக்கிறது.
சில ஆயுதங்கள் அவற்றை உபயோகிப்பவர் மேலேயே திருப்பிக் கொள்ளும். மிதமிஞ்சிய குற்றச்சாட்டுகளும் அதுபோலத்தான்.
சமூகம் விசித்திரமான கூண்டு. அதில் ஏழைகள் கைதிகள் ஆகிறார்கள். இவர்களை விசாரிக்கவும், தண்டிக்கவும், கண்டிக்கவும் பணம் நீதிபதியாகிறது.
பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது; மனதின் ஈரமும் வேண்டும். வாழ்க்கை என்பது கணக்கற்ற வேடிக்கைகள் நிறைந்தது.
இலட்சியவாதிக்கு இன்பமே கிடைப்பதில்லை; இன்பமாக வாழ்பவனுக்கு இலட்சியமே வருவது இல்லை.