பெண்ணால் முடியும்!

ஆகஸ்ட் 01-15

ஏழு கண்டங்களின் மலைச்சிகரங்களில் ஏறி அரியானா சகோதரிகள் சாதனை

அரியானாவைச் சேர்ந்த சகோதரிகள் டஷி மற்றும் நுங்ஷி மாலிக் இருவரும் சேர்ந் து உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள ஏழு உயர்ந்த சிகரங்களில் ஒன்றாக ஏறி சாதனை படைத்துள்ளனர். உலகின் முதல் இரட்டை சகோதரிகளாக இவர்கள் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இவர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக சாகசக்காரர்களுக்கான கிராண்ட்ஸ்லாம் என்கிற விருதினை வென்றிருக்கின்றனர். ஏழு கண்டங்களின் மலைச்சிகரங்கள் மற்றும் வட துருவத்திலிருந்து தென்துருவத்திற்கு பனிச் சறுக்கு மற்றும் மூன்று துருவ சவால் என பல்வேறு தேசிய மற்றும் மண்டல சாதனைகளைச் செய்துள்ளனர்.

இவர்களது 21-ஆவது வயதில் உலகின் மிகப் பெரிய சிகரத்தை அடைந்தனர். மேலும், கின்னஸின் 60ஆ-வது பதிப்பில் இவர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்களை அரியானாவின் பெண் குழந்தை பாதுகாப்பு அமைப்பின் தூதராக நியமித்துள்ளனர்.

இந்த சகோதரிகளின் சாதனைகளைப் பற்றி மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறும்போது, பெண் சிசுக் கொலை மற்றும் கல்வியறிவின்மை உள்ள நம் நாட்டில் இளைய சமூகத்தின் முன் மாதிரியாக இவர்கள் விளங்கவேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த பெண்கள், ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ மலைச்சிகரம், அய்ரோப்பாவின் எல்பர்ஸ் மலைச்சிகரம், தென் அமெரிக்காவின் அகோன்கா குவா மலைச்சிகரம், ஓசியானாவின் கார்ஸ்டென்ஸஸ் பிரமிட் மலைச்சிகரம், அலாஸ்காவின் மெக்கின்லே மலைச்சிகரம் மற்றும் அண்டார்டிக்காவின் உயரமான வின்சன் மலைச்சிகரங்களில் ஏறி வெற்றி கொண்டுள்ளனர்.

 


 

அய்.நா.மன்றத்தில் பேசிய குப்பைப் பொறுக்கும் பெண்

புனேவைச் சேர்ந்தவர் சுமன் மூர். இவர் தனது சொந்தக் கிராமத்திலிருந்து புனேவிற்கு வேலைத் தேடி வந்தார். அவர் ஜாதியைக் காரணங்காட்டி வேலை தர மறுத்துவிட்டனர். எனவே, குப்பைப் பொறுக்கத் தொடங்கினார்.

குப்பைப் பொறுக்குகின்றவர்களின் நிலை கண்டு பொறுக்க முடியாத இவர், நகராட்சித் துணையுடன், குப்பைப் பொறுக்குகின்றவர்களை ஒன்றுசேர்த்து வீடுவீடாகக் குப்பைச் சேகரித்தனர்.

பிறகு பழைய பொருட்கள் சேகரிப்போர் நலனுக்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தினர். இதை அரசும் ஏற்றுக்கொண்டது. அதன்படி அடையாள அட்டையும் மாதச் சம்பளமும் வழங்கியது. இதன் மூலம் அவர்களுக்கு நிலையான வருவாய் கிடைத்ததோடு நிலையும் நிலைப்பட்டது.

இவர்களது சாதனை கண்டு அய்.நா.மன்றம் அழைத்தது. அய்.நா. மன்றத்திற்குச் சென்று இவர் இவர்களது நிலையை உருக்கத்துடன் எடுத்துப் பேசினார். ஒரு கடை நிலை ஊழியரான இப்பெண் அய்.நா. மன்றத்தில் பேசியது கிடைத்தற்கரிய வாய்ப்பல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *