ஆங்கிலம் பரவ, வளரக் காரணம்

ஆகஸ்ட் 01-15

அடிக்கடி காலத்திற்கேற்ப மாற்றம் பண்ணிக்கொள்வதால்தான் வளர்ந்து கொண்டே இருக்கிறது ஆங்கிலம். அந்த ஆங்கிலத்தின் அடிப்படைகளைக் கற்க விரும்பும் எல்லோருக்கும் உதவுவது ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி. ஆண்டுக்கு மூன்று தடவை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தனது இந்தப் பேரகராதியில் புதுப்புது சொற்களைச் சேர்க்கும். இந்த முறை இளைஞா உலகின் கோட்வேர்ட்ஸ் எல்லாவற்றையும் உள்ளே சேர்த்துவிட்டார்கள்.

மொத்தம் சேர்க்கப்பட்டுள்ள 500 வார்த்தைகளில் சில எடுத்துக்காட்டாக. Sexting, Texting, Photobombing  (ரெடி, ஸ்டெடி, ஸ்மைல் என பில்டப் எல்லாம் கொடுத்து யாரையாவது போட்டோ எடுக்கும்போது, சரியாக பிற நண்பர்கள் ஃப்ரேமுக்குள் குதித்து கலாய்ப்பதுதான் ஃபோட்டோபாம். அதாவது அந்த போட்டோவுக்கு வேட்டு வைத்து அதைக் கெடுப்பது.) போன்றவை மேலும், Churidar  – போன்றவையும் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

Arre Yaar – அட நண்பா என பொருள் தரும் இந்தி வார்த்தை.

Bhelpuri – – குட்டி பூரியோடு மசாலா, பொரி, மிக்சர் சேர்த்து தரப்படும் சாட் உணவு.

Dhaba – ரோட்டோர சாப்பாட்டுக்கடை. போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன. இதுபோன்று காலமாற்றத்திற்கு ஏற்ப புதிய சொற்களை பிற மொழியிலிருந்து அப்படியே ஆங்கிததல் சேர்த்துக்கொண்டுதான் ஆங்கிலம் வளர்ந்துள்ளது; பரவியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *