காமராசர் முதல்வராகப் பொறுப்பினை ஏற்றதும் எல்லோரும் மகிழும் விதத்தில் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ரத்து செய்தார். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கப்பட, நேர்முகத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 150ஆக இருந்தது. இதனை இராஜாஜி 50 மதிப்பெண்களாகக் குறைத்தார். இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெருமளவு பாதித்தனர். மீண்டும், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட, நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்ணை 150 உயர்த்தினார் காமராசர்.