எங்களுடைய சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட நான், என்னுடைய இளம்வயதில் ஒரு பக்தி உணர்ச்சியுடைய இந்துவாக இருந்தேன். நான் பங்கெடுத்திருந்த சமூக சீர்திருத்த இயக்கம்கூட இந்துமத வாதத்தின் வடிவமைப்பிற்குள்ளேயே சமூகத்தைச் சீர்திருத்த வேண்டுமென்று கருதி வந்ததாகும். சுவாமி விவேகானந்தரைக் குறித்தும் நான் ஏராளமாகப் படித்தேன். நான் பள்ளிக்குச் செல்லும் முன்பு எனக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர், விவேகானந்தரின் தீவிரமான அனுதாபியாவார். எனவே, இந்துமகாசபை மீது எனக்கு சிறிது பற்றுதல் இருந்தது. அதனுடைய தலைவர்களான பண்டிட் மாளவியா, டாக்டர் மூஞ்சே ஆகியோர் கேரளத்திற்கு ஒரு முறை வந்தனர். எனினும் படிப்படியாக நான், தமிழ்நாட்டிலிருந்த ராமசாமி நாயக்கரின் போதனைகளினாலும், கேரளாவிலிருந்த பகுத்தறிவுவாத கோஷ்டியினர் செய்த பிரச்சாரத்தினாலும் ஈர்க்கப்பட்டேன்.
(இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் எழுதிய ஓர் இந்தியக் கம்யூனிஸ்டிக் நினைவலைகளில் என்னும் நூலிலிருந்து)