தாலிக்கு எதிராய்
புரட்சிக்கவிஞர் மகளின் கேள்வி :
நான் என்ன மாடா? என் கழுத்துக்கு ஏன் லைசென்ஸ்?
1944இல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மூத்த மகள் சரஸ்வதிக்கும், கரூர் அருகில் உள்ள கட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கண்ணப்பருக்கும் திருமணம் முடிக்க முடிவாயிற்று.
திருமணத்துக்கு முன்பு தாலி செய்வதைப் பற்றி பேச்சு எழுந்தது. உடனே சரசு (சரஸ்வதி) என்னைப் பார்த்து,
ஏன் அத்தை! நான் என்ன மாடா? முனிசிபாலிட்டியில் கட்டுவதுபோல் எனக்கும் லைசென்ஸா கட்டப் போறாங்க?
என்று கேட்டாள். நான் வியப்பில் விக்கித்துப் போனேன். தமிழ்நாட்டின் புரட்சிக்கவிஞனுக்கு ஏற்ற புரட்சிப் பெண்தான் இவள் என்று நான் மகிழ்ச்சியடைந்தேன்.
– திருமதி மஞ்சுளாபாய் கானாடுகாத்தான்
குறிப்பு: திருமதி மஞ்சுளாபாய் பெரும் செல்வந்தரான வை.சு.சண்முகம் செட்டியாரின் இணையர். தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் ஆகியோருடன் பற்றுக் கொண்டவர். அன்னை நாகம்மையார் காலனியில் தங்கி, சுயமரியாதை இயக்கப் பணியாற்றியவர்.