தாலி கட்டாத பல ஜாதிகள் குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ளனவே அங்கே போய் அவர்களிடம் புனிதம்பற்றிப் பேசுவார்களா? கழுதைக்கும், கழுதைக்கும், நாய்க்கும், நாய்க்கும் புரோகிதர்களைக் கூப்பிட்டு, (அதற்கும் தட்சணை வாங்குகிறார்களே!) காதலர் தினத்தில் நடத்தினார்களே, படங்களும் வெளிவந்தனவே!
கழுதைக்குத் திருமணம் நடத்தி, தாலி கட்டிப் படம் எடுத்துத் தங்கள் உறவை வெளிச்சம் போட்டனரே – அப்போது எங்கே போனது இந்தப் புனிதம்?
மார்வாரி வட்டிக் கடையில், டாஸ்மாக்கில் குடிப்பதற்கு மனைவியை அடித்து உதைத்துத் தாலியை அடமானம் வைத்துக் குடிக்கிறார்களே, அதைத் தடுக்க புனிதம், புடலங்காய்கள் எல்லாம் எங்கே போனார்களாம்? ஒன்றைக் கொடுத்து ஒன்பது பெறத் தயாரா?