தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில் புத்தகத்தில் இருப்பதை மட்டுமே போதிப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்-படுத்தியுள்ளன. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கற்பித்தலில் பயன்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தில் பள்ளி மாணவர்கள் விரைவாகத் தேர்ந்து வருகின்றனர். எனவே தகவல் தொழில்நுட்பத்தில் ஆசிரியர்கள் தேர்ந்திருப்பதும் அதைக் கற்பித்தலில் பயன்படுத்துவதும் அவசியமாகும்.
– ஆர்.கோவிந்தா, துணைவேந்தர், புதுடில்லி தேசிய கல்வித் திட்டம், மேலாண்மைப் பல்கலைக்கழகம்.
இன்றைய காலகட்டத்தில் வர்த்தக நிறுவனங்களின் தேவைக்கேற்ற கல்வி என கல்வி மாறிவிட்டது. இந்தியாவில் இன்று ஒரு புதிய சவால் தோன்றியிருக்கிறது. மனித குலம் இன்றைக்குப் புதிதாகக் கற்பதற்கு எதுவுமே இல்லை என்றும் பரிணாமத்தின் சிகரத்தை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து இனம் தொட்டுவிட்டது என்றும் பேசப்படுகிறது. நாம் தேடுகிற கல்வி மானுட விடுதலைக்கானது. மானிட மகத்துவத்துக்கானது. அது நேற்றும் இல்லை. இன்றும் இல்லை. நாளை பிறக்கும்.
– வி.வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
சொல்றேங்க….!
நல்லா சொல்லுங்கம்!
இன்னும் லட்சம் வருசங்களுக்கு முன்னாடியே இருக்காய்ங்க!