பெண்ணடிமை

நவம்பர் 16-30

ஈரான் நாட்டில் பெண்கள் கைப்பந்து (வாலிபால்) விளையாட கடந்த 2012ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. பெண்கள் கைப்பந்து விளையாடினால் அவர்களை அநாகரிகமாக நடந்துகொள்ளும் ஆண் பார்வையாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது என ஈரான் அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஜூன் 20ஆம் நாள் ஈரானில் அந்நாட்டு அணியுடன் இத்தாலி அணி மோதிய ஆண்கள் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியைக் காண இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஷெபர்ட்ஸ் புஷ் பகுதியைச் சேர்ந்த இங்கிலாந்து_ஈரானிய சமூக ஆர்வலர் கோன்சே கவாமி ஒரு குழுவாகச் சென்றார். அந்தக் குழுவினரைக் காவல் துறையினர் அடித்து கைது செய்து விடுவித்தனர்.

கோன்சே கவாமி மட்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைப்பந்துப் போட்டியைக் காண முயன்றதற்காக கவாமிக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பன்னாட்டு அளவில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கவாமியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் இணையதளக் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

கைப்பந்துக்குத் தடை போட்டது ஈரான். அந்த தொந்தரவெல்லாம் எதற்கு? கண்ணிருந்தால் தானே கண்டதையும் பார்ப்பதற்கு! போடு தடை கண்களுக்கு என்று ஒருபடி மேலே (?!) சென்றிருக்கிறது சவுதி அரேபியா. பெண்களின் கண்களைக் காவியங்-களில் வர்ணித்த்திருக்கிறார்கள். இன்றைக்கும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். போதாக்-குறைக்கு, இந்தப் பொண்ணுங்களே இப்படித்-தான் புரிஞ்சு போச்சுடா.. அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா என்கிறார்கள் திரைப்படக் கவிஞர்கள்.

அப்படிப்பட்ட கல்லறையே பெண்களின் கவர்ந்திழுக்கும் கண்கள் என்று யோசித்து இதுவரை புர்காவில் கண் மட்டும் தானே தெரிந்தது. அதையும் தடை செய்துவிடலாமே என்று முடிவு செய்திருக்கிறது சவுதி அரேபியா. சபலத்தைத் தூண்டும் கண்களை உடையவர்கள் அவற்றை மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். நாங்கள் அவர்களின் கண்களை மறைக்கச் சொல்லி வலியுறுத்து-வோம். அப்படிச் சொல்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது என்கிறார் ஒழுக்கத்தை வளர்த்தல் மற்றும் தீயொழுக்கத்தைத் தடுக்கும் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஷேக் மோட்லப் அல் நபெத். அது என்ன சபலத்தைத் தூண்டும் கண் என்றால் எது?

அதற்கென்ன அளவுகோல் என்று கேட்டால், அதற்கான ஸ்கேலையும் கையில் வைத்திருக்கிறார்கள் இந்த ஒழுக்க வாத்தியார்கள். மூடப்படாத அழகான வடிவம் கொண்ட, ஒப்பனை செய்யப்பட்ட கண்கள், ஒப்பனை செய்யப்படாவிடினும் அழகான கண்கள் என்கிறது அந்த ஸ்கேல். சவுதியின் தற்போதைய மன்னர் அப்துல்லா-வுக்குப் பிறகு ஆட்சிக்கு வர இருக்கும் இளவரசர் நயிஃப் காலத்திலாவது இத்தகைய நிலை மாறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூடுதலாக ஏமாந்திருக்கிறார்கள்.

அவர், இது இஸ்லா-மின் தூண்களுள் ஒன்று. இந்தச் சட்டத்தை அனைத்து முஸ்லிம்களும் ஆதரிக்க வேண்டும் என்கிறார். எதற்கு பாஸ், பெண்களிடம் தலையை மூடு, காலை மூடு, கையை மூடு, வாயை மூடு, முகத்தை மூடு, கண்ணை மூடு என்று பார்ட் பார்ட்டாக தடை செய்கிறீர்கள்? மொத்தமாக பெண்களையே தடை செய்துவிட்டால் ஒரே வேலையா முடிஞ்சுடுமே! அவங்களையெல்லாம் விரட்டி வெளியில அனுப்பிட்டா ஒரேடியா ஒழுக்கம் நட்டுக்கிட்டு நிற்கும். தீயொழுக்கம் இல்லாமல் போகும். அவ்வளவு சிரமப்பட்டுக்கிட்டு எதுக்கு அவங்களை நாட்டுல வச்சிக்கணும்? அடுத்தடுத்த தலைமுறை இல்லாமல், நீங்களும் அழிஞ்சிடு-வீங்க… நாடாவது நல்லா இருக்குமே! என்று பொங்கி எழுந்துவிட்டார்கள் குறைந்தபட்ச மனிதநேயம் உள்ளவர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *