ஆப்.கி.பார் டிராமா சர்க்கார்
அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா…
ஒலகத் தலவரா அவதாரம் எடுக்கற அடுத்த முயற்சியில நம்ம அண்ணன் நேபாளம் போனது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்… அங்க கோவிலுக்குப் போனாரு, ரோட்ல நடந்தாரு, அல்லாரையும் பாத்தாரு. இதெல்லாம் தாண்டி இன்னொரு சூப்பர் வேல செஞ்சாரு. அது என்னா? செண்டிமெண்டா அடிச்சாரு.
எம்.ஜி.ஆர் நடிச்ச நாளை நமதே படத்த ரீரிலிஸ் பண்ணாரு. பல வருசம் முன்னாடி ஜீத்பகதூர்னு ஒரு பையன் அப்பா, அம்மாவ பிரிஞ்சி இந்தியா வந்துட்டான்.
அவன அண்ணன் குஜராத்ல கண்டெடுத்து வளத்தாரு. அவனும் வளந்தான், அண்ணனும் வளந்தாரு. அவன் பெரிய பையன் ஆனான், அண்ணன் பிரைம் மினிஸ்டர் ஆனாரு.
அவன அவங்க குடும்பத்தோட சேத்து வைக்கனும்னே நேபாள் டூர் போட சொன்னாரு. நேபாளுக்கு ஜீத்பகதூரையும் கையோட கூப்பிட்டுக்கிட்டுப் போனாரு. பிரியா படத்து ரஜினி மாதிரி ரோடு ரோடா பாடிக்கிட்டே போனாரு. அவங்க குடும்பத்தக் கண்டு பிடிச்சாரு.
அவங்ககூட சேத்து வச்சி, கண்கலங்குனாரு. நாளை நமதே இந்த நாளும் நமதே பாட்டு ஓடுச்சு. கூடி நின்ன இந்தியப் பத்திரிக்க கண்ணெல்லாம் ஆறா ஓடுச்சு. ஆனா ஜீத்பகதூரு கலங்கவேயில்ல… ஏன்? அங்கதான் ஒரு டிவிஸ்ட். ஜீத்து, மோடி அண்ணனுக்கே தெரியாம திருட்டு லாரில போயி அவங்க குடுமபத்த 2012 ஆகஸ்ட் 23_லயே பாத்துட்டான். இத அவன் தன் மூஞ்சிபுத்தகத்ல (Facebookல) படமா போட்டுட்டான். இது அண்ணனுக்குத் தெரியாமலே இருந்துடுச்சி.
அதுக்கு முன்னாடி 2012 ஜூன் 17ஆம் தேதி ஜீத் போட்ட ஸ்டேடஸ்:
Hey Fri Gm
Bye bye India.
2012 ஜூன் 19ஆம் தேதி போட்ட ஸ்டேடஸ்:
Hey Fri Today is I m v happy
Bcos I m my home (Nepal)
இதுவும் வளமான குஜராத் கதயான்னு யாரும் கேக்கக் கூடாது. அது அல்லாம் அண்ணன் தூங்கும் போது நடந்தது. ஆனாலும் அண்ணன் கடம ஒணர்ச்சியோட ஜீத்பகதூர அவங்க குடும்பத்தோட சேத்து வச்சிட்டு ட்வீட்டும் போட்டுட்டாரு.
அப்ப நம்ம வேல… ம், பாடுங்க…
# நாளை நமதே, இந்த நாளும் நமத
– எஸ்.எஸ்.சிவசங்கர்