ஆண்டவரும்
அளவுகோலும்!
நான் எப்போதும்
உன்னைக் கைவிட மாட்டேன்
என்று சொன்ன
என் ஆண்டவரே!
அனைத்தையும்
சுனாமி வந்து சுருட்டி
வாயில் போட்டுக்கொண்டுவிட
தனிமரமாய்
தன்னந்தனியே தவிக்கிறேனே!
நெஞ்சிலே நஞ்சை வைத்து
நாவிலே தேனைத் தடவி
நயவஞ்சகமாய்ப் பேசி
நம்பவைத்துக் கழுத்தறுப்பது
தனிமனித ஒழுக்கக்கேட்டின்
அடையாளம் மட்டும்தானா?
ஆண்டவராகிய உமக்கு – அந்த
அளவுகோல் கிடையாதா?
– சீர்காழி கு.நா.இராமண்ணா
மகாத்மா மண்ணில்
மதம் எனும் மலத்தை
தேர்தல் களமாய்
தின்னுகின்றன
நாகரிகப் பன்றிகள்
செய்திகளும் தின்பண்டங்களாக
தின்னுகின்றன மாயைகளை…
(மோடி… மோடி
ஜாடி… ஜாடி)
ஜனநாயகம் என்னும் குடிசையை
அயோத்திய அனுமான்கள்
தீவைக்கின்றன…
மீண்டும்
பதாகை ஆட்சி
வேண்டுமென்று…
நம் இராவணனின் விபீசனர்கள்
கூட்டாஞ்சோறு எனும்
தேர்தல் பந்தியில்
பாத்தி கட்டுகிறார்கள்
இந்திய வாக்காளனுக்கு
நோட்டா எனும்
வாக்குச் சீட்டில்
வாக்குச் சாவடி
ஜனநாயகமே
உனது மறுமலர்ச்சி
எப்போது?
– சின்னவெங்காயம், சென்னை