காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். காஷ்மீர் அரசின் நிருவாகத் திறமை இன்மையே இதற்குக் காரணம். காஷ்மீரில் வாழும் மக்களை காஷ்மீரிகளாகப் பார்ப்பதைவிட இந்தியர்களாகப் பார்க்க வேண்டும். இதுவே பிரச்சினைகளுக்கு முடிவை ஏற்படுத்தும்.
– பிரகாஷ்மேனன்,
லெட்டினன்ட் ஜெனரல், இந்திய ராணுவம்
தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் பேசாவிட்டால் வேறு எங்கு போய் நாம் தமிழ் பேசுவது? எந்த மொழிக்கும் நான் எதிரி அல்ல. ஆனால், தாய்மொழியைக் கற்றுக் கொண்ட பிறகு எந்த மொழியைக் கற்றுக் கொள்வதிலும் எனக்கு முரண்பாடு கிடையாது.
– வைரமுத்து, கவிஞர்
நான் இங்குதான் இருக்கிறேன். சரணடைய மாட்டேன். நாம் எவ்வகையிலாவது பெற்றி பெறுவோம். நாம் போரிடத்தயார். லிபியாமீது தாக்குதல் தொடுத்துள்ள மேற்கத்திய நாடுகள் விரைவில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் விழுந்துவிடும்.
– கடாபி
அதிபர், லிபியா
பிரதமராகும் எண்ணம் எனக்கில்லை. பீகார் மக்கள் அவர்களுக்குச் சேவை செய்யவும் வளர்ச்சியடைந்த பீகாரை உருவாக்கவும் எனக்குப் பொறுப்பினை அளித்துள்ளார்கள்.
நிதீஷ்குமார், முதல் அமைச்சர், பீகார்
நாடு, மதத் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதற்காகவே நான் பாகிஸ்தான் செல்ல விரும்புகிறேன். பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. அது குறித்து ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பெருமைப்படுகின்றனர். நாங்கள் ஏன் அணு ஆயுதம் வைத்திருக்கிறோம்; ஏன் என்றால் இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன.
– பர்வேஸ் முஷாரப்மேனாள் அதிபர், பாகிஸ்தான்
புத்ததேவ் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதையாவது உருப்படியாகச் செய்துள்ளாரா? அவர் எதுவுமே செய்யவில்லை. எனது சாதனைகள் பற்றியும் அவரது நிருவாகத்தைப்பற்றியும் அவரிடம் நேருக்கு நேர் வாதாட நான் தயார். அவர் தயாரா?
– மம்தா பானர்ஜி,
அமைச்சர், ரயில் வேதுறை