நான் ஏன் பெரியாரிஸ்ட் ஆனேன்?

அக்டோபர் 16-31

என் தந்தை கடவுள் மறுப்பாளர்… 20 வருடம் ஆன்மீக குடும்பத்தில் வளர்ந்த தாயின்மீது தன்கொள்கையைத் திணிக்காமல்.. தாயின் விருப்பப்படி கோவில்களுக்கு அழைத்துச் சென்று வருவார்.. திருப்பூருக்கு நாங்கள் குடிவந்த புதிதில்.. அம்மா பெருமாள் கோவிலுக்குச் செல்ல விருப்பப்பட.. நான் அம்மா புறப்பட, அப்பா அழைத்துச் சென்றார்..

கடவுள் வழிபாடு முடிந்து, துளசி இலை கொடுத்தபின்.. வெள்ளியாலான  கிரீடம் போல் உள்ள ஒன்றை எல்லார் தலையிலும் வைத்து வைத்து எடுத்தார் அர்ச்சகர்.. நான் இதைக் கவனியாது துளசியைத் தின்று கொண்டிருந்தபோது.. என் தலையிலும் அதை வைக்க வந்தார். நான் ஏதோவென்று திடுக்கிட்டு அதைக் கையால் தடுக்க, அந்தப் பாத்திரம் கீழே விழ.. அர்ச்சகர் என்னைச் சூத்திரவாள் என்று சொல்ல.. என் தந்தை அர்ச்சகரை அடிக்கப்போக.. சின்ன பரபரப்பு ஏற்பட்டு அமைதியானது.. வீட்டுக்கு வந்த என் தந்தை “இதனால்தான் நான் கடவுளை மறுக்கிறேன் என்றார்… சூத்திரன் என்றால் வெப்பாட்டிமகன், திருடன், ஓடிப்போனவன்” என்று பல மோசமான அர்த்தங்கள் இருப்பதைச் சொன்னார்.

“அம்மா அன்று முதல் பெருமாள் கோவிலுக்குப் போவதில்லை” “பின்னாளில் என் மனம் பெரியாரின் வசம் சென்றது”

– இளஞாயிறு மலர்கள்
(இணையத்தில் உலவியபோது முகநூலில் படித்தது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *