குற்றவாளிகளிடமிருந்து சமுதாயம் எதிர்பார்ப்பது அவரிடம் ஏற்பட வேண்டிய மாறுதலையே. எனவே குற்றம் செய்தவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனைக்குப் பதில் மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டியது அவசியம். தண்டனைக்கு உள்ளாகுபவரால் அவரின் குடும்பம், அவரைச் சார்ந்திருப்பவர்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கின்றனர்.
– சுஷில்குமார் ஷிண்டே மத்திய உள்துறை அமைச்சர்
அய்.நா.வின் செயல்பாடுகளை உள் ஆய்வு செய்தபோது இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது அமைப்புரீதியாக அய்.நா. தோல்வி அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. உறுப்பு நாடுகள், தாங்கள் நிர்ணயித்த பணிகளை அய்.நா. செய்வதற்குப் போதிய ஆதரவை அளிக்கவில்லை. அய்.நா.வும் உரிய முறையில் செயல்படவில்லை.
– பான் கீ மூன், அய்.நா. பொதுச்செயலாளர்
நரேந்திர மோடியைத் தூற்றுவதற்கு நீங்கள் ஒரு இஸ்லாமியராகவோ கிறித்தவராகவோ அல்லது இந்துமத எதிர்ப்பாளராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனிதாபிமானமுடைய மனிதராக இருப்பதே போதுமானது.
– நவீன் மூடர் கூடம் திரைப்பட இயக்குநர்
பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வழங்குவதும், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை வெற்றிபெறச் செய்வதும்கூட சில நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் நடப்பதாக கூறப்படுகிறது. இதேநிலை தொடருமானால் டாக்டரைச் சந்திக்கச் செல்லும் நோயாளிகள் அந்த டாக்டர் உண்மையிலேயே மருத்துவம் படித்தவர்தானா என்பதை உறுதி செய்ய அவரது சான்றிதழை வாங்கிச் சரிபார்க்கும் நிலை ஏற்படலாம்.
– நீதிபதி கே.கே.சசிதரன், சென்னை உயர் நீதிமன்றம்.