கணவன் : என்னடி பண்ற, வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா?
மனைவி : ஆமா நல்லா இருக்காங்க. இப்பதா பேசணும்னு தோனிச்சா?..
கணவன் : கொஞ்சம் பிசி.
மனைவி : உங்க பிசி எங்களுக்குத் தெரியாது, பேஸ் புக்ல பல்லு இளிச்சுட்டு இருக்கிறது தானே உங்க பிசி.
கணவன் : சரி மேட்டர்க்கு வா.
மனைவி : அதானே பேச்சை மாத்துங்க.
மனைவி: சாப்டிங்களா?
கணவன்: சாப்டியா..?
மனைவி: நான் உங்களக் கேக்குறேன்.
கணவன்: நான் உன்கிட்ட கேக்குறேன். மனைவி : என்ன நான் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்றீங்களே.
கணவன்: நான் சொல்றதையே திரும்பவும் சொல்றியா?
மனைவி : முதல்ல பேஸ் புக் ஆப் பண்ணிட்டு என் கிட்ட பேசுங்க.
கணவன் : நான் பேஸ் புக் ஓபன் பன்னலடி (எவ்ளோ நேரம்தான் சமாளிக்கிறது).
கணவன் : வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா?
மனைவி : லூசு பிடிச்சிப் போச்சா உங்களுக்கு, முதல்ல அதான கேட்டிங்க, சொல்லிட்டேன், எத்தன தடவ கேப்பிங்க? நல்லா இருக்காங்க… நல்லா இருக்காங்க… போதுமா போதுமா …….
கணவன் : ஏன் டென்ஷன் ஆகுற? வேற என்ன சொல்லு?
மனைவி : ஒன்னும் இல்ல.
கணவன் : சாப்டியா???
மனைவி : போன் கட் ஆயிட்டு.
சிறிது நேரம் கழிச்சி : SMS……… ஒன்னு பேஸ் புக் வேணுமா இல்ல குடும்பம் வேணுமா நீங்களே முடிவு பண்ணுங்க. பேசுறது எப்பவாச்சும், அப்பவும் அந்தச் சனியன ஓபன் பண்ணி வச்சிட்டு என் கிட்ட கேட்டதே கேட்டுக்கிட்டு சாக அடிக்காதிங்க……… இனிமே போன் பண்ண வேண்டாம் மெசேஜ்ல பேசிக்கலாம்.
இவளும் ஒரு fake id வந்தா நானும் மனசு விட்டுப் பேசலாம். என்னோட மனச ஏன் புரிஞ்சிக்க மாட்டிங்கா இவ???? சத்திய சோதனை….!!!
– சையத் பாபு முகநூலில் எழுதியது