மன்னர் ஆட்சி நடைபெற்று வரும் அய்க்கிய அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் வாழும் அல்_அஜ்மி என்ற பெண், மன்னர் ஆட்சியைத் தூக்கி எறிய மக்கள் முன்வர வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்ற வாசகங்களைத் தனது டுவிட்டர் இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.
அந்நாட்டில் மன்னரை அவமதித்துக் கருத்துத் தெரிவிப்பது குற்றமாகக் கருதப்படுவதால் அஜ்மி கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அல்_அஜ்மிக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. உடனே சிறையில் அடைக்கப்பட்டார் அஜ்மி.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக குவைத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தீர்ப்புக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.