ஜேம்ஸ் வாட்சன்

ஏப்ரல் 16-30

ஜேம்ஸ் வாட்சன் ஓர் உயிரியலாளர்; மரபுக்கூறு வல்லுநர்; டி.என்.ஏ. (D.N.A.) என்ற மரபு அணுவின் அமைப்பை பிரான்சிஸ் கிரீக் என்ற மற்றொரு அறிவியலாளருடன் சேர்ந்து 1953ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர். 1962ஆம் ஆண்டில், வாட்சன், கிரீக் மற்றும் மாரிஸ் வில்கின்ஸ் ஆகிய மூவருக்கும் சேர்த்து, உடலியலுக்கான (Physiology) நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

வாழும் பொருட்களில் (Living material)  செய்தி மாற்றங்களுக்கு நியூக்லிக் ஆசிட்டால் ஆன மோலிக்யூலியா அமைப்பும் அதன் குறிப்பிடத்தக்க செயல்பாடும் என்ற அவரது கண்டுபிடிப்புகளைப் பாராட்டி, அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.

1928ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அமெரிக்காவின் இல்லினோஸ் மாநிலத்தின் சிகாகோ நகரில் ஜேம்ஸ் வாட்சன் பிறந்தார். ஜூன் மிட்செல் மற்றும் ஜேம்ஸ் டி. வாட்சன் தம்பதியினரின் ஒரே மகன் அவர். அவரது தந்தையார், ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்தவர்; வரி வசூலிப்பாளர். அவர் கத்தோலிக்க மதத்தினராக வளர்க்கப்பட்டார். பின்னொரு கட்டத்தில், அவர், கத்தோலிக்க மதத்திலிருந்து விடுபட்டது என் வாழ்நாளிலேயே நான் அடைந்த நல்வாய்ப்பாகும். ஏனென்றால், எனது தந்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்ததுதான் என்று சொல்லியிருக்கிறார்.

வாட்சன் பொதுப் பள்ளியில் படித்து, அவருடைய சம காலத்தவரைவிட முந்தி பட்டம் வாங்கியுள்ளார். 15ஆவது வயதிலேயே, சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். இந்தியானா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1950இல் விலங்கியல் துறையில் அவர் பி.எச்.டி. (Ph.D) பட்டம் வாங்கியபோது அவருக்கு வயது 22.  மேல் படிப்பு ஆராய்ச்சிக்காக அவர் கோப்பன்ஹேகம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

அந்தக் காலத்துக் கருத்துப்படி, மரபுக்கூறுகள் (Genes) புரோட்டீன்களால் ஆனவை; தங்களுக்குள்ளேயே தங்களைப் பெருக்கிக் கொள்ளும் டி.என்.ஏ. (D.N.A) என்று சொல்லப்படும், குரோமோசோமின் மற்றொரு முக்கியப் பகுதியானது, ஒரு கிறுக்குப் பிடித்த டெட்ரா நியூக்லியோ டைய்டு (Stupid tetra newcleotide)  புரோட்டின்களின் ஆதரவுக்கான கட்டுமானத்திற்கு உதவி வருவன.

அந்த ஆரம்பக் காலத்திலேயே அவர் டி.என்.ஏ.தான் ஜெனரிக் மோலிகுயிள் (Generic molecule) என்பதை அறிந்திருந்தார். பிறகு விளக்கப்படக்கூடிய ஓர் உறுதியான மோலிக்யூலர் கட்டுமானத்தை டி.என்.ஏ. பெற்றிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

கிரீக்குடன் சேர்ந்து வாட்சன் கேவன்டீஷ் ஆய்வகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, டி.என்.ஏ.வின் இரட்டை ஹெலிக்ஸ் அமைப்பைப் புரிந்துகொண்டார். அந்தக் கண்டுபிடிப்பின் முதல் அறிவிப்பு செய்யப்பட்டபோது, அது பத்திரிகைகளில், சரியாக வெளியிடப்படவில்லை.

பிறகு, இயற்கை (Nature) என்ற அறிவியல் இதழுக்கு ஆய்வுக் கட்டுரை அனுப்பினார். மற்ற உயிரியல் (Biology) வல்லுநர்களும், நோபல் பரிசு பெற்றவர்களும், அது 20ஆம் நூற்றாண்டில் மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு என்று பாராட்டினர். நியூயார்க் நகரத்தில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள நினைவுப் பலகையில் அவரது சாதனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

1968ஆம் ஆண்டில் வாட்சன், கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தில் (Cold Spring Harbour Laboratory) ஆணையராக நியமிக்கப்பட்டார். அதன் தலைவர் ஜிம் வாட்சன், ஓர் ஆராய்ச்சிச் சூழ்நிலையை, அறிவியல் உலகத்தின் எந்தவொரு சூழலுடனும் ஒப்பிட முடியாததாக அமைத்து இருக்கிறார். அவருடைய தலைமையின் கீழ்தான் புற்றுநோய்க்கான ஜெனடிக் அடிப்படையின் அமைப்புகளைப் புரிந்துகொண்டு, அதற்கான சில பங்களிப்புகளைக் கொடுத்து இருக்கிறது.

மனிதர்களின் துன்பங்களுக்குக் காரணமான புற்றுநோய் மற்றும் நரம்பு தொடர்பான நோய்கள் ஆகிய வியாதிகளைக் கண்டறிந்து செயல்படவும், அவற்றிற்கான சிகிச்சை அளிப்பதற்கும், மோலிகியூலியர் உயிரியல், அதன் ஜெனடிக்ஸ் ஆகியவை பற்றியும் ஆய்ந்து, கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் ஆணையராக, தலைவராக, சான்சலராக இருந்து, வாட்சன் பெரும்பணி ஆற்றியுள்ளார் என்று பாராட்டியுள்ளார். இன்றைக்கு உள்ள நூலகங்களில், பேணி வைக்கப்பட்டுள்ள புனைக்கதை அல்லாத 100 புத்தகங்களில் வாட்சன் எழுதியுள்ள த டபிள் ஹெலிக்ஸ் (The double Helix) என்ற நூலும் ஒன்று. அந்த நூலானது, அறிவியலாளர்கள் மற்றும் அவர்கள் பணிசெய்யும் முறை பற்றி பொதுமக்கள் வைத்திருந்த கருத்தை அப்படியே மாற்றிவிட்டது.

எந்த அளவிற்கு அவர் ஓர் ஊரறிந்த அறிவியலாளராக இருந்தாரோ அந்த அளவிற்கு அவர் மனிதகுலத்தின் மேம்பாட்டில் பெருமளவு ஆர்வம் செலுத்தி வந்தார். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த பொழுது, தன்னுடன் பணிபுரிந்த பயோகெமிஸ்ட்ரி மற்றும் மோலிகியூலர் பயாலஜியைச் சேர்ந்த 12 துறைத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற ஒருவரையும் சேர்த்துக் கொண்டு உடனடியாக வியட்நாமிலிருந்து, அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தீர்மானம் இயற்றினார்.
1975ஆம் ஆண்டு ஹிரோசிமா நகரில் அணுகுண்டு வீசிய 30ஆவது ஆண்டு விழாவில், தன்னுடன் 2 ஆயிரம் அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்களைச் சேர்த்து, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் போர்டுக்கு – அவரது அணு ஆயுத வளர்ச்சிக் கொள்கைக்கு எதிராகப் பேசினார்.

மக்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்: அறிவியலில் உள்ள வாழ்க்கையிலிருந்து ஒரு பாடம் என்ற அவரது நினைவுகள் பற்றிய நூலில், பூகோள இயல்படி வேறுபட்டு நிற்கின்ற மக்கள்தொகையில், அறிவாற்றலிற்கு இனம்தான் ஒரு காரணம் என்று கற்பித்ததை அவர் சொல்லவில்லை. அவர் அனைவரும் சமம் என்றே நம்பினார். நிறத்தைக் கொண்டு மனிதனை வேறுபடுத்தக் கூடாது என்று அவர் சொல்கிறார். ஏனென்றால், மிகமிகத் திறமைசாலிகள், மாறுபட்ட நிறமுடையவர்களாக இருக்கிறார்கள்.

1968ஆம் ஆண்டு வாட்சன் எலிசபெத் லீவிஸ் என்ற பெண்ணை மணந்தார். அவருக்கு இரண்டு ஆண் மக்கள். அதில் ஒருவருக்கு மனநிலை பிறழ்தல் நோய் இருந்தது. மனநலம் காப்பதற்கான சிசிச்சையில் வளர்ச்சி வேண்டும் என அவர் விரும்பினார். அதற்காக மரபியலின் (Genetics) பங்களிப்பு எவ்வளவு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும் ஆய்ந்தார். வாட்சன் ஒரு நாத்திகராக இருந்தார். 2003இல் மனிதகுல அறிவிக்கையில் (HUMANIST MANIFESTO) கையெழுத்திட்ட 21 நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்களில் வாட்சனும் ஒருவர்.

– தமிழில்: ஆர்.ராமதாஸ்

– நீட்சே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *