உலக அரிசி உற்பத்தியில் கடந்த 30 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த தாய்லாந்து நாட்டைப் பின்னுக்குத் தள்ளி 2012ஆம் ஆண்டில் முதலிடம் பிடித்தது இந்தியா. அப்போது 1 கோடி டன்னை ஏற்றுமதி செய்த இந்தியா 2013_14ஆம் ஆண்டில் 1 கோடி டன்னைத் தாண்டும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த ஆண்டில் உலக அரிசி உற்பத்தி 1.2 சதவிகிதம் உயர்ந்து 47.20 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரிசி ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள 5 நாடுகளில் மட்டும் 3.80 கோடி டன் அரிசி கையிருப்பு உள்ளது. இது, உலக நாடுகளின் ஓராண்டு இறக்குமதிக்குச் சமமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அரிசி கையிருப்பு 40 சதவிகிதம் அதிகரித்து 1.8 கோடி டன்னை எட்டியுள்ளது.