பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் ஏப்ரல் 3 அன்று நடைமுறைக்கு வந்தது.
மூன்று விண்வெளி வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்துடன் மார்ச் 29 அன்று இணைந்தது.
இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மே 2 முதல் 14 வரை மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வடகொரியா நாட்டின் புதிய பிரதமராக ஏப்ரல் 1 அன்று பாக் பாங்_ஜூ பொறுப்பேற்றுள்ளார்.