குறும்படம்
காட்டுமிராண்டி
ஜே.ராஜ்குமார், செல்பேசி: 9245371859
எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஜாதகத்தின் பெயரால் இளைஞர்கள் சோம்பேறிகளாக்கப்படுவதுடன் திருட்டு, குடிப்பழக்கம், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி அவர்களது எதிர்காலமே கேள்விக் குறியாக்கப்படுவது சித்தரிக்கப்பட்டுள்ளது. தீய வழியில் செல்லும் இளைஞர்களைத் திருத்த மாற்றுத்திறனாளி மூலமாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் படம்.
நூலின் பெயர்: வள்ளுவரின் குறள்களிலே
ஆசிரியர்: கவிஞர் மா.மதிமாறன்
வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம், 10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. செல்பேசி: 9790706548/49
பக்கங்கள்: 128 விலை ரூ. 60/-
திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் சிலரின் உரையின் தன்மை – உரையின் போக்கு உரைத்துப் பார்த்து உண்மை நிலை உணர்த்தப்பட்டுள்ளது.
உரையாசிரியர்களின் உரையினைக் கூறி மறுத்து, இப்படி வள்ளுவர் எழுதியிருப்பாரா என்ற அய்யத்தைப் படிப்போர் மனதிலும் ஏற்படுத்தி, பின்பு தெளிவான உரை இல்லை என மறுத்து, தனது விசாலப் பார்வையால் நடைமுறை இயல்பை – யதார்த்தத்தை விளக்கித் தனது கருத்தைக் கூறி பகுத்தறிவு கொண்டு ஆராயவும், சிந்திக்கவும் சொல்லி வேண்டுகோள் விடுத்திருப்பதே வள்ளுவரின் குறள்களிலே……!
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பற்றிய விவரங்களுடன் அவை அமைந்துள்ள இடங்கள், கருத்தரங்கம், ஆய்வு வேலை (Project) பள்ளிப் புத்தகங்கள், கட்டுரைகள், டியூசன் மய்யங்கள், மின் – புத்தகங்கள் (e-books) போன்ற பல விவரங்கள் உலக அளவிலும், இந்திய அளவிலும் தகவல்களுடன் இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளைப் பற்றிய விவரங்களை mycollege.in என்ற முகவரியில் பார்வையிடலாம்.