காதலர் தினத்தை சாக்காவச்சி, பேப்பர்ல பேர் வரும்… பப்ளிசிட்டி கிடைக்கும்னுதானே என் நாய்க்குக் கல்யாணம் பண்ணி வச்சே…. இப்போ இது கர்ப்பமாயிருக்கு. உன் செலவிலேயே ஒரு சீமந்தம் பண்ணு…!
உங்க தலைவர் எடியூரப்பாவுக்கு வச்ச பில்லிசூனியத்தை எத்தனை எடுத்திருப்பேன்… அதனால, வர்ற எலக்ஷன்ல ஒரு சீட் கொடுக்கணும்… இல்ல, உங்க கட்சிக்கே சூனியம் வச்சிடுவேன் ஜாக்கிரதை….!
நூறு கோடி கேட்டு மிரட்டினாங்கன்னு சாமியார் நித்தியானந்தா அழுது புலம்புறாரே டாடி… ஏன், அவர் சக்தியால கேட்டவங்க வாய் திறக்க முடியாத மாதிரி செஞ்சிருக்கலாம்… இல்ல, அவர் சக்தியால நூறு கோடியை ஒரு நொடியில வரவழைச்சுக் கொடுத்து பிரச்சினையை முடிச்சிருக்கலாம்ல….?
ஒவ்வொரு தடவையும் ராக்கெட் விடுறதுக்கு முன்னாடி காளஹஸ்தி கோவில்ல பூஜை பண்ணிட்டுத்தான் இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட்டே விடுவாங்க… இப்போ இஸ்ரோவிலும் ஊழலாம்…. நான் நெனைக்கிறேன், இவ்ளோ பூஜை பண்ணியும் எங்களை மாட்டிவுட்டேயேன்னு விஞ்ஞானிகள்தான் காளஹஸ்தி கோவில் கோபுரத்தை இடிச்சிருப்பாங்களோ….?
– கருத்தும் படமும் : கர்ணா