முற்றம்

முற்றம் ஜனவரி 01-15

தகவல் தளம்

www.indianrail.gov.in இதுதான் இந்தியன் ரயில்வேயின் இணையதளம். இந்தியா முழுவதற்குமான ரயில் பயணம் குறித்த அனைத்துத் தகவல்களும் இங்கிலீஷில் தரப்பட்டுள்ளன. ரயில்களின் கால அட்டவணை, கட்டணம் மற்றும் இருக்கைகள் விவரம், முன்பதிவு இணையதள இணைப்பு, இருக்கைகள் ஒதுக்கீடு குறித்த அவ்வப்போதைய தகவல்கள், ரயில்வே பயண விதிமுறைகள் என முதன்மைத் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. இணையத்தின் வழியாகவே பயணச்சீட்டு எடுத்திட

www.irctc.co.in என்ற தளத்திற்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். வீட்டில் இருந்தபடியே அல்லது கணினி மைய்யத்திலிருந்தோ பயணச்சீட்டு எடுத்திடலாம். பயணச்சீட்டினை அச்செடுத்துக் கொள்ளவும், நமது செல்பேசியில் குறுஞ்செய்தியாக பெற்றுக்கொள்ளவோ வசதி அளிக்கப்பட்டுள்ளது.


நூல்

நூல் : சட்ட விழிப்புணர்வும் பாதுகாப்பும்
தொகுப்பாசிரியர் : கே.கே.சொக்கலிங்கம்
வெளியீடு : குளோபல் மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகம், 228/280. ஜவஹர் பஜார்,
கரூர்- 639001 பேச : 04324-262360
பக்கங்கள் : 96

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ஆகிய 3 சட்டங்களைப் பற்றிப் பொதுமக்களுக்கு எளிய முறையில் விளக்கும் விழிப்புணர்வு நூல். நுகர்வோரின் உரிமைகள், நுகர்வோர் குறைதீர் மன்ற முகவரிகள், முறையிடுவ்து எப்படி என்பது குறித்த விவரங்கள் மற்றும் மாதிரிப் படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மனித உரிமை ஆணையத்தின் பணிகள், அதிகாரம் மற்றும் புகார் தரும் விவரங்கள் உள்ளிட்டவை மிகுந்த பயனளிக்கும். அதேபோல தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்,விண்ணப்பங்களின் மாதிரி, சில தீர்ப்புகள்,தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் என இன்றியமையாத தகவல்களின் தொகுப்பு நூல்.


ஆவணப்படம்

மாதவிடாய்

இயக்குநர் : கீதா இளங்கோவன்
38 நிமிடங்கள் ரூ.100

தொடர்புக்கு : 9443918808 மாணவிகள் இருவரிடம் ‘மாதவிடாய்’ என்றால் என்ன?’ என்ற கேள்வியுடன் தொடங்கு-கிறது படம். வெட்கத்தோடும் கூச்சத்தோடும் நெளிகிறார்கள். நகரங்களில், கிராமங்களில் மாதவிடாயின்போது உடல்ரீதியாகவும், மனம், சமூகம் சார்ந்தும் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பல நிலைகளில் உள்ள பெண்களின் அனுபவங்கள் சொல்லப்படுகின்றன.. மாதவிடாய் பற்றிய மருத்துவ அறிவியல் விளக்கம் அனைவருக்கும் புரியும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. மாதவிடாயை  ‘தீட்டு’ என தள்ளி வைக்கும் மத நம்பிக்கைகள், பழக்க-வழக்கங்கள் குறித்தும் படம் பேசுகிறது.

நாப்கின்கள் பற்றியும் அதன் பயன்பாடும் தெளிவாக விளக்கப்படுகிறது. பெண்களின் தொல்லைகள் குறித்து இதுவரை ஆண்கள் உலகம் பேசத் தவிர்த்த இந்தப்பிரச்சினையை இப்போதும் ஒரு பெண்தான் பேசியிருக்கிறார்.ஆமாம்,இந்தப் படத்தின் இயக்குநர் கீதா இளங்கோவன்.படத்தின் துணைத்தலைப்பு : இது ஆண்களுக்கான பெண்களின் படம். இதற்காகவே பாராட்ட-வேண்டும். அவசியம் அனைத்து ஆண்களும் பார்க்க-வேண்டிய, பகிரவேண்டிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *