பெண்கள் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க இரவு வெளியே செல்லக்கூடாது, ஒரு துணையோடுதான் செல்லவேண்டும் என்றெல்லாம் சொல்லி மீண்டும் வீட்டுக்குள் ளேயே பெண்களை முடக்க முயன்றுகொண்டிருக்கும் இந்துத்துவாக்களின் பிற்போக்குக் குரல்களுக் கிடையே வடபுலத்திலிருந்து ஒரு முற்போக்குக் குரல் ஒலித்துள்ளது. சோசலிசக் கொள்கை யிலிருந்து வந்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், “தற்காப்பு கலைகளை, பெண்கள் கற்று கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். பாட்னாவில், பள்ளி மாணவர் களுக்கான, டேக்வாண்டோ தற்காப்பு கலை, தேசிய போட்டியை துவக்கி வைத்த நிதிஷ்குமார்,“ ஜுடோ, கராத்தே, டேக்வாண்டோ போன்ற தற்காப்பு, சண்டை பயிற்சிகளை அனைவரும் கற்று கொள்ள வேண்டும். ஈவ்-டீசிங் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க, பெண்கள் கண்டிப்பாக, இந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், நல்ல உடல் நலம், உஷார் நிலை, சுயபாதுகாப்பு போன்றவை பெண்களுக்கு கிடைக்கும். அதனால் தான், சில ஆண்டுகளுக்கு முன், பள்ளிகளில், தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகளை என் அரசு துவக்கியது, என்று பேசி பெண்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டியிருக்கிறார்.