ஈரோட்டுச் சூரியன் – 5

நவம்பர் 16-30

குறும்புக்கார மாணவன்ன் இராமன்

– மதுமதி

பத்து வயதில்
பள்ளிக்கு முற்றுப்புள்ளி.
தீண்டத்தகாதவர்களுடன் சேர்க்கையே
இராமனை முரடனாக்கியது
என குருடனாயினர்.

பாட்டியின் வளர்ப்பு
சரியில்லை..
ஒரு நிமிடம்
இனி அங்கு வேண்டாம்..
இராமனை வீட்டிற்கு
அழைத்து வாருங்கள்;
இராமன் தானாய் திருந்துவான்
பாருங்கள்;

சின்னத்தாயம்மை
நாயக்கரிடம் சொல்ல,
சிற்றன்னையிடம் சொல்லி
இராமனை வீட்டிற்கு அழைத்து வந்தார்;
இராமன் மனதளவில்
நொந்தார்;

இராமன்
அங்கேயும்
அடங்கவில்லை;
வீட்டிற்குள்ளும்
முடங்கவில்லை;

சக நண்பரோடு
பழக வேண்டாம் என்பதற்கு
ஜாதிதான் தடையா என
யோசித்தார்;
அன்றிலிருந்து அவர்களை
நேசித்தார்;

செய்யாதே என
வீட்டார் சொல்லுவதையே
தவறாமல் செய்ய விழைந்தான்;
கீழ் ஜாதியினர் வீட்டிற்குள்
மனம் விரும்பி நுழைந்தான்;
தாழ்த்தப்பட்ட
தன் நண்பர்களைக் காண
சென்றார்;
அவர் இல்லத்திலேயே
உணவையும் தின்றார்;

கோபப்பட்ட நாயக்கர்
காலில் விலங்கிட்டார்..
விலங்குடனே
வீதியில் வந்து
விளையாடுவார்..

சம்பிரதாயத்தால்
இராமனை வதைத்தனர்;
ஆங்கிலப் பள்ளிக்கு
அனுப்பி வைத்தனர்;

அங்கே..
குறும்பு செய்யும்
மாணவர்களுக்கு
தலைவரானார்..

சக மாணவர்களை
அடிக்கடி அடித்துவிடுவார்;
மன்னிப்பு கடிதம் எழுதி
கொடுத்துவிடுவார்;

படிப்பில் பிடிப்பு இல்லாமற்போக
பள்ளிக்கும்
இராமனுக்குமிடையே
மீண்டும் பிரிவினை ஏற்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *