– பேரா.புலவர் ந.வெற்றியழகன்
அறைகின்றார் அண்ணா
தமிழ்ப்பண்டிதர்களுக்கு _ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை இல்லை. வினாக்கள் கடந்த செப்டம்பர் 1_15, 2012. உண்மை இதழில், தமிழ் இலக்கியங்கள் _ அறைகின்றார் அண்ணா என்னும் தலைப்பில் மறுவெளியீடாக வந்துள்ளது.
விடையளிக்க விரும்பினேன்
இவற்றிற்கு அன்றைய தமிழ்ப் பண்டிதர்கள் _ என அழைக்கப்பட்ட தமிழ் புலவர்கள் விடை தந்துள்ளனரா? என, எனக்குத் தெரியாது. ஆனால், இந்த வினாக்களைப் படித்த ஓர் எளிய இன்றைய தமிழ்ப்புலவன் ஆகிய நான் விடையளிக்க விரும்பி அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
புரிந்துகொள்ள மாட்டார்களா, புலவர்கள்?
இந்த வினாக்கள் வாயிலாக அண்ணாவின் தமிழிலக்கிய நுண்மான் நுழைபுலமும்,இ அஃகி, அகன்ற தமிழறிவும் நம் தமிழர்களுக்கு – குறிப்பாக தமிழ்ப் புலவர்களுக்கு விளங்காமற் போகாது.
மேலும் வளர்த்தாமல், நேரடியாக அண்ணாவின் வினாக்களுக்கு ஒரு தமிழ்ப்புலவன் ஆகிய நான் என் விடைகளைத் தந்துள்ளேன்.
முதன்மை வினா எண்: 1
நாம் தமிழர்கள் என ஒப்புக் கொள்கிறோம்.
விடை
எதுவும் கிடையாது. தனித்தமிழ்கலைகள் என்பதாக உள்ளவை _ அதாவது இலக்கியங் களையே கலைகள் என அண்ணா சுட்டுகின்றார் _ ஆரியம் கலந்தவை இலக்கியங்களே ஆகும். தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களை வேண்டுமானால் தமிழர்ககுரிய இலக்கியங் (கலை)களாகக் கூறலாம்.
முதன்மை வினா _ எண்: 2
தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும்தான் தமிழர் கலைகளா?
விடை:
இவை முழுக்க முழுக்க தமிழர்களுக்குரிய தமிழர் கலை (இலக்கியங்)களாகக் கூறமுடியாது.
முதன் வினா எண்-3
தமிழ்க்கலைகளின் லட்சணங்கள் என்ன? அவை, தமிழர்ககுப் போதிக்கும் நெறி யாவை?
விடை:
தமிழ்க் கலைகள் அதாவது இலக்கியங்கள் இவற்றிற்கென தனி இலக்கணம் (இலக்கணம்) எதுவும் கிடையாது!
ஆரியம் கலவாத தமிழிலக்கியங்கள் தனிநிலையில் இருந்தால்தானே அவற்றிற்கென இலக்கம் கூறப்பட்டிருக்கும்?
இலக்கணமே இல்லை என்கிறபோது,இ கலை தமிழர்க்கு என்ன நெறியைப் போதித்து இருக்கும்? போதித்திருக்க முடியும்? ஒன்றும் இல்லை!
முதன்மை வினா எண்: 4
தமிழர்க்கு அறிவைப் போதித்து, தன்மானத்தை ஊட்டி, முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நூல்கள் என்னென்ன உண்டு?
விடை:
இவ்வகையில் நூல்கள் அவ்வளவாக இல்லை. அய்யா தந்தை பெரியார் அவர்களின் கருத்தினைப் பார்ப்போமே!
நமக்குப் பயன்படத்தக்க, நம் வளர்ச்சிக்கு ஏற்ற இலக்கியம் எதுவும் கிடையாது. இருப்பவை எல்லாம் மிகமிக மோசமானவைகளேயாகம்.
அதாவது, நமக்குப் பயன்படத் கூடியதாகவோ, நம் மக்களை வளர்ச்சியடைச் செய்யக் கூடியதாகவோ, நடப்பிற்கு ஒத்ததாகவோ, வழிகாட்டக்கூடியதாகவோ எதுவும் கிடையாது.
நம் இழிவைப் போக்கக் கூடியதாகவோ, அறிவை வளர்க்கக் கூடியதாகவோ, நடப்புக் ஒத்ததாகவோ எதுவாகிலும் ஒரு இலக்கியம் இருக்கிறதா? _ என்று உங்களில் யாராவது எடுத்துக்காட்டுங்கள்.
தமிழில் பெரும் அறிஞர் என்று எல்லோராலும் போற்றப்பட்ட மறைமலையடிகளே தமிழில் நம் வளர்ச்சிக்கான புத்தகங்கள் இல்லை இலக்கியங்கள் இல்லை என்று கூறியுள்ளார் _ (பெரியார்: விடுதலை: 21.4.1965)
… இருக்கின்ற இலக்கியங்களுள், நீதி வருகின்ற நூல்களுள் சிறந்த நூல் என்று கொள்ளத்தக்கது திருக்குறள் தான்! _ (பெரியார்: நூல் _ திருக்குறளும் பெரியாரும்)
முதன்மை வினா எண்: 5
தமிழர்தம் கலைகளுள் ஆரியத்தை உயர்வென ஒப்பாத நுல்களோ அவர்தம் கொள்கைகளைப் புகுத்தாத நூல்களோ ஏதேனும் உண்டா?
விடை:
அப்படிப் பார்த்தால், எவையும் இல்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று, ஆரிய வர்ண_ஜாதி வல்லாண்மையை உடைத்து நொறுக்கித் தள்ளும் பிரகடனம் (றிக்ஷீஷீநீறீணீனீணீவீஷீஸீ) ஆக, திருக்குறள் மட்டுமே திகழ்கிறது. ஆகவே, ஆரியம் புகுத்தப்படாத, ஆரியத்தை உயர்வென ஒப்புக் கொள்ளாத நூல்கள் திருக்குறள் ஒன்றைத் தவிர, வேறு எவையும் இல்லை!
முதன்மை வினா: 6
தொல்காப்பியம் ஓர் ஆரியரால் எழுதப்பட்டது என்று சொல்வதை நீங்கள் ஒப்புகிறீர்களா? அதில் ஆரியத்திற்கு ஆதரவும், உயர்வும் அளிக்கப்பட்டிருக்கிறதென்பதை நீங்கள் மறுக்க முடியுமா?
விடை:
ஆம்! நான் ஒப்புக் கொள்கிறேன்.
தொல்காப்பியர் ஓர் ஆரியர் (பார்ப்பனர்) என்று ஆய்வு செய்து கூறியுள்ளார் மொழிஞாயிறு _ ஞா.தேவ நேயப்பாவாணர் அவர்கள்.
தொல்காப்பியர் பல இடங்களில் தவறினதற்குக் காரணம் அவரது ஆரியப் பிறப்பேயன்றி வேறன்று. _(பாவாணர்:நூல்: ஒப்பியன் மொழிநூல்_பக்கம்: 82)
தொல்காப்பியரின் இயற்பெயர் திரண தூமாக் கினி என்பதாலும், தந்தை ஜமதக்னி முனிவர் என்பதா லும், தொல்காப்பியத்தில் உள்ள சில இலக்கண வழுக் களாலும் தொல்காப்பியர் ஆரியரே! என்று துணியப் படும். _ (பாவாணர்: நூல்: ஒப்பியன் மொழி நுல். _ பக்கம்: 73)
தொல்காப்பியத்தில் ஆரியத்திற்கு ஆதரவும், உயர்வும் அளிக்கப்பட்டிருக் கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.
தொல்காப்பியத்துள், திருமால் (மாயோன்), முருகன் (சேயோன்), இந்திரன் (வேந்தன்), வருணன் போன்ற பல கடவுள், பல தேவர் வணக்கங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
மேற்பிறப்பு (ஜாதி), கீழ்ப்பிறப்பு (ஜாதி) ஜாதிப்பாதுகாப்பு இவை அந்நூலில் பொதிந்துகிடக்கின்றன.
ஆரிய வர்ண ஜாதித் தத்துவம் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வர்ண முறை கூறப்பட்டுள்ளது. இவை, அந்தணர், அரசர், வணிக, வேளாளர் என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
பார்ப்பனராகிய அந்தணர் (பிராமணர்)க்குரிய கோலங்கள் மிகத் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளன.
நூலே,கரகம், முக்கோல் மணையே ஆயுள் சாலை அந்தணர்க்குரிய _ (தொல்காப்பியர்: சூத்திரம்: 1572)
அந்தணராகிய பார்ப்பனருக்கு, நூல் (பூணூல் அல்லது உபநயனம்), களுகம் (கமண்டலம்), முக்கோல் (திரிதண்டம்) மணை _ (ஆசனப்பலகை), இவை உரியவையாகக் கூறப்பட்டுள்ளன.
வணிகர் என்பார் வடமொழி வேத _ மனு நீதி முறைப்படி வைசிகன் (வைஸ்யன்) என்கிறார்.
வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை _ (தொல்கா: சூத்திரம்: 1578)
என்று வெளிப்படையாக சூத்திரம் செய்திருக்கிறார்.
இனி, தொல்காப்பியச் செய்திபற்றி, தந்தை பெரியாரின் கருத்தை மேற்கோளாக் காட்டுகிறேன். தொல்காப்பியத்தில்தான் என்ன இருக்கிறது? அதிலும் நாலுஜாதி; அந்த நாலுஜாதியில் நம்மைத்தான் கீழ் ஜாதியாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணங்கள் கீழோர்க்கு…. என்ற பாடலைப் பார்த்தாலே போதுமே! _ (பெரியார்: விடுதலை: 4.10.1967, பக்கம்:2)
இத்துணை சான்றுகள் மிக வலிவானவையாக இருக்க இவை இல்லை என்று நாம் எப்படி மறுக்க முடியும்? மறுத்தால், குன்றுமுட்டிய குருவியின் இரங்கத்தக்க நிலைதானே எமக்கு ஏற்படும்?
முதன்மை வினா எண்: 7
சங்க இலக்கியங்கள் பலவற்றில் ஆரியக் கொள்கைகள் புகுத்தப்பட்டிருக்க வில்லையா?
விடை:
ஆம்! புகுத்தப்பட்டிருக்கின்றன. இதனை எவரும் மறுக்க முடியாது. சங்க இலக்கியங்கள் பற்றி மொழி ஞாயிறு பாவாணர் கருத்துகளைப் பார்ப்போம். கடைக் கழக (சங்க) நூல்கள் முப்பத்தாறனுள் ஒன்றாவது, கலைபற்றியதன்று; பாவியமும் அன்று.
அவற்றுள், ஆசாரக் கோவையோ வடநூல் மொழிபெயர்ப்பாயும் பிறப்பில் உயர்வு _ தாழ்வு வகுப்பதாயும் எளிய பொருள்களைக் கூறுவதாயும் உள்ளது. _ (பாவாணர்: நூல்: ஒப்பியன் மொழிநூல் _ பக்கம் 194-_195.)
சங்க இலக்கியங்கள் மனுநீதியைப் போற்றுதல், யாகங்கள் செய்தல், பாரத இராமாயணக் கதைகளைப் பரப்புதல் இவற்றைப் பணிகளாகக் கொண்டிருந்தன.
எடுத்துக்காட்டுகள்:
பல்யாக சாலை முதுகுடுமிப்பெருவழுதி; இராசசூய வேட்ட பெறுநற்கிள்ளி இவர்கள் வேத வேள்விகள் புரிந்த செய்திகள் கூறப்பட்டுள்ளன. அன்றியும், சங்க இலக்கியங்களாகக் கருதப்படும் புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலானவற்றுள்.
முருகன் பிறப்பு, திருமால் பெருமை, இராமன், சீதை, பரமன், சிவன், இந்திரன், அகலிகை கதை முதலான இதிகாசப் பெயர்களும் கதைகளும் தங்குதடையின்றி, தாராளமாக வழங்கப்பட்டுள்ளன.
சார்பு வினா: (1)
தமிழ்க்கலைகளில் ஆரியத்திற்கு இடமிருக்கலாமா?
விடை:
கூடாது, கூடாது, கூடவே கூடாது.
சார்பு வினா: (2)
அவற்றைப் போக்க நீங்கள் ஏதேனும் முயற்சி செய்ததுண்டா? முயல்வீர்களா?
விடை:
எந்த முயற்சியும் பெரும்பாலான தமிழ்ப்புலவர்கள் செய்ததில்லை; செய்கிறதுமில்லை; செய்வதுமில்லை.
இதுபற்றி, அய்யா பெரியார் கூறவதைப் பார்ப்போமா?
தமிழ்ப் புலவர்கள் தமிழை ஒரு, நியூசென்ஸ் ஆக ஆக்கிவிட்டார்கள். இன்றும், வடமொழிக் கதைகள், கற்பனைகள், ஆபாசங்கள் புகுத்தப்பட்ட இலக்கியங்கள் பேராலேயே தமிழ்ப்புலவர்கள் ஆகின்றனர்; வித்துவான்கள் ஆகின்றனர்; டாக்டர் _ ஆகின்றனர்.
…. உலகில், வேறு எங்குமே இல்லாத அதிசயப் பிறவிகள் நம், புலவர்கள்! _ (பெரியார்: விடுதலை: 12.4.1965)
முதன்மை வினா: 8
தமிழ் எழுத்துடைய நூல்கள் தமிழரால் எழுதப்பட்ட நூல்கள் யாவும் தமிழ்க்கலை களாகுமா?
விடை:
ஆகாது.
சார்ப் வினா ( 1 )
ஷேக்ஸ்பியர் நாடகத்தை, ஒரு தமிழர் தமிழில் மொழிபெயர்த்தால் அது தமிழ்க்கலையாகுமா?
விடை:
ஆகாது.
சார்பு வினா (2)
அதேபோல், கிறிஸ்து, இஸ்லாம் ஆகிய பிறமதக் கொள்கைகளைத் தமிழில் மொழி பெயர்த்தால் அவை தமிழர் மதமாகுமா? இலக்கியமாகுமா?
விடை:
ஒருக்காலும் அவை, தமிழர் மதமும் ஆகாது! இலக்கியகுமாகாது!
சார்பு வினா(3)
இல்லையெனில், ஆரிய மதம் கொள்கைகளையும் உணர்த்தக் கூடியதும், அதனோடு தமிழரை இழித்தும் பழித்தும், கூறக்கூடியதுமான புராண இதிகாசங்களைத் தமிழ்க் கலைகள் என்னலாமா?
விடை
அவற்றைத் தமிழ்க்கலைகள் என்று கூறவே கூடாது.
சார்பு வினா:(4)
அவை, இந்த முறையில் எழுதப்பட்டதன்று என்பதையாவது நிரூபிக்க முடியுமா?
விடை
நிரூபிக்கவே முடியாது! ஒரே ஓர் எடுத்துக்காட்டு:
தன் ஆட்சியில் (இராமன் ஆட்சி) உள்ள குடிமகன் ஒருவன் (சம்பூகன்) பார்ப்பனனைக் கடவுளாக வணங்காமல் கடவுளை நேரில் வணங்கிப் பயன்பெற முயற்சித்தான் என்று அவனைத் துண்டு துண்டாக வெட்டிச் சித்திரவதை செய்தானே; _ (பெரியார் _ விடுதலை 10.3.1968)
நிலைமை இவ்வாறிருக்க, புலவர்கள் ஆரியத்தை உயர்த்தியும் தமிழரை இழித்தும் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சியை இல்லை என்று எப்படி நிரூபிக்க முடியும்? முடியாது.
முதன்மை வினா: 9
தமிழர்க்குக் கொள்கை என்ன? சைவமும் வைணவமும் சாதியாச்சாரமும்தானா?
தமிழர்க்கு என்கிறபோது, தொல்காப்பியர் காலம்; சங்க காலம், காவிய காலம், களப்பிரர் காலம், பக்திநெறிக் காலம் முதலான பல நிலைகள் உள.
இவற்றுள், எந்தக் காலத் தமிழர்க்கு என்ன கொள்கை எனத் தெரியாது!
வரையறைக்கப் படவுமில்லை. சைவமும் வைணவமும் சாதியாச்சாரமும்தான் இடைக் காலத்தில் தமிழர் கொள்கையாக இருந்துள்ளது.
சைவத்தில் நந்தனார் தாழ்த்தப்பட்டோர், திருநீலகண்டர் குயவர். வைணவத்தில் திருப்பாணழ்வார் தாழ்த்தப்பட்டவர், திருவரங்கம் பெரிய கோயிலுள் நுய முடியாமலும் ஜாதியாசாரத்தால் பேணப்பபட்டவர்கள்.
சார்பு வினா ( 1 )
அவற்றிற்கு ஆதாரம் என்ன? பெரிய புராணம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள்; நாலாயிரத் திவ்யப் பிரப்ந்தம் முதலான சைவ, வைணவ பக்திப் பனுவல்கள். அவற்றிற்கான ஆதரங்கள் ஆம்!
சார்பு வினா ( 2 )
அவற்றைப் பற்றிய கொள்கைகளை வலியுறுத்தும் நூல்கள் தமிழர்க்குக் கலைகள் ஆகுமா?
விடை:
ஆகமாட்டா!
முதன்மை வினா எண்: (10)
தமிழரை இழிவுபடுத்தக்கூடியதும் தமிழரின் தன்மதிப்பைப் போக்கக் கூடியதும், தமிழர்தம் அறிவை மாய்க்கக் கூடியதும், தமிழரை மூடநம்பிக்கையில் அ:ழ:ததக் கூடியதும் தமிழர்க்கு அடிமை நிலையையே சதம் எனப் போதிக்கக் கூடியதும், தமிழரை,இ தமிழரல்லாத ஒரு வகுப்பினருக்கு வேசி மகனாக இருக்க வைப்பதும் ஆகிய நூல்கள் தமிழ்க்கலைகளா? இல்லை எனில், அவற்றை ஒழிப்பதில் நீங்கள் ஏன் குறுக்கிடுகிறிர்கள்?
விடை:
மேல்குறிப்பிட்ட அடிப்படையில் எபந்த நூல்கள் உறுதியாகத் தமிழ்க் கலைகள் அல்லவே அல்ல! அவை, ஆரியக் கலைகள். இவற்றை ஒழிப்பதில், ஏன் தமிழ்ப் புலவர்கள் ஏன் குறுக்கிடுகிறார்கள்? என்றால், எல்லாம் ஆரிய மாயைதான்! பார்ப்பனிய _ பக்தி _ மோட்ச, புண்ணிய மோகம்தான்! அவற்றால், அவற்றைப் பரப்புவதால் வரும் ஆதாயம்தான்! செல்வாக்குதான்! சற்சூத்திரப் பட்டப் போதைதான்! சைவ _ வைணவ சமய வெறிதான்! வேசிமகன் _ என்கிற இன இழிவு,இ சூத்திரன் என்கிற இரிவு பற்றியெல்லாம் இவர்கட்கு கவலை இல்லை! சிவபதம், வைகுந்தபதம் அடைவதே இத்தகையோரின் இன்றியமையா நோக்கம்.