சிந்தனைக் (கவி)த் துளிகள்

அக்டோபர் 1-15

– உடுமலை நாராயண கவி

  • உண்ணாத உபவாச விரதங்கள் கொள்ளுறார
    ஒருசட்டி உப்பு மாவை உள்ளுக்குத் தள்ளுறார்
    முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக நடக்கிறார்
  • கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு! – இது
    களைப்பபை நீக்கிக் கவலையைப் போக்கி
    மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு!
  • உலகம் வாழ வானம் மழை
    பொழிந்திட வேண்டும் – வானம்
    பொழிந்திட நாம் வனமரங்கள்
    வளர்த்திட வேண்டும்.
  • தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
    காசுமுன் செல்லாதடி – குதம்பாய்
    காசுமுன் செல்லாதடி.
  • துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
    விந்தை புரிவது சிரிப்பு! – இதைத் துணையாய்க் கொள்ளும் மக்களின் முகத்தில்
    துலங்கிடும் தனிச் செழிப்பு!
  • அறிவேதரும் பெருமை சிறுமை!
    அவரவர்பால் அமைந்த திறமை!
    உறவுடன் யாவரும் வேற்றுமை
    நீக்கிட முயல்வது கடமை!
  • ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
    காசுக்குப் பின்னாலே – குதம்பாய்
    காசுக்குப் பின்னாலே
  • ஆளையேச்சுத் தின்பா ரெல்லாம்
    வேலை செஞ்சேயாகணும் – இனி
    அதிர்ஷ்டம் யோகம் என்ற சொல்லை – அக
    ராதிவிட்டே எடுக்கணும்.
  • நெனைச்சதை எல்லாம் எழுதி வச்சது
    அந்தக் காலம்; – எதையும்
    நேரில் பார்த்தே நிச்சயிப்பது
    இந்தக் காலம்
  • 10. மழைவரு மென்றே மந்திரம் ஜெபிப்பது
    அந்தக் காலம்; – மழையைப்
    பொழிய வைக்கவே யந்திரம் வந்தது
    இந்தக் காலம்!
  • வரவு செலவு எண்ணிப் பார்க்கணும் – வீட்டு
    வாழ்வின் தேவைக்கண்டு கேக்கணும் – போலி
    மரியாதை மதிப்புக் காக
    அல் டாப்புகளை நீக்கணும்!
  • ஓடி யோடிப் பல வேலைகள் செய்பவன்
    உடம்பது திடமாகும் – செய்யாவிடில்
    உறுப்புகள் முடமாகும் – அல்லாமலும்
    உற்சாகம் குறைவாகும்!
  • பிறவியிலே குலபேதமும் ஏது?
    பெண்களைக் குறை சொல்வது பெருந் தீது!
    அறநெறி யதற்கிது அணுவுந் தகாது;
    அரி ஹரி யென் திருச்செவி கேளாது.
  • மழை கொறஞ்சா விளைவுயராது – நம்ம நாட்டில் ஜாதி
    மதமிருந்தாப் பகமை மாறாது;
    எதையும் சுத்தப் படுத்தணும்!
  • அன்பே கடவுள் என்ப தெதனாலே? – அதில்
    ஆன்ம சக்தி இன்பம் இருப்பதாலே!
    சாத்திரங்கள் பொய்யென்ப தெதனாலே?- ஏமாத்துகிற
    வார்த்தையு மிருப்பதாலே!
  • ஜாதிமதம் இல்லையென்ப தெதனாலே? – மனம்
    சமத்துவம் தானடைந்த தன்மையாலே!
    பொதுவுடைமை கேட்ப தெதனாலே? – தொழில்
    புரிந்தும் புசிப்பற்றுப் போனதாலே!
  • ஒட்டிக்கு ரெட்டியாக வட்டிக்குப் பணம் கொடுத்து
    ஊரார் முதலைக் கொள்ளையடிப்பார் – இவர் அதை
    ஊதுபத்தி சாம்பிராணி சூடம் வாங்கி எரிப்பார்
    உண்ணாமலே செலவழிப்பார்!
    பட்டம் பதவிக் கிறைப்பார் – கோயில்
    கட்டுவதற்கும் செலவழிப்பார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *