குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்

ஜனவரி 01-15

30 ஆடுகள்

இது மந்தையிலிருந்த ஆடுகளின் எண்ணிக்கை அல்ல.  திருச்சி மாவட்டம் கருப்பத்தூர் அக்கிரகாரத்துப் பார்ப்பனர்களின் பாழும் வயிற்றில் யாகத்தின் பெயரால் கொன்று கொட்டப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கையாகும்.  அவர்கள் வாழுமிடம் அக்கிரகாரமா?  கசாப்புக்கடையா?  என்று கேட்கத் தோன்றுகிறதா?  தற்காலத்தும் பார்ப்பனரின் காலைக் கழுவித் தம் பெண்டு பிள்ளைகளோடு குடிக்கும் அழுக்கு மூட்டைகள் உள்ளனரே!

கும்பகோணம் ஆட்டுக்கொலை யாகமும், திருவான்மியூர் ஆட்டுக்கொலை யாகமும் நடைபெற்று இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை.  அதற்குள் திருச்சி ஜில்லா லாலாப்பேட்டை கருப்பத்தூர் அக்கிரகாரத்தில் மற்றொரு கொடிய யாகம் கிளம்பியிருக்கின்றது.  கும்பகோணம் பார்ப்பனர்களை விட கருப்பத்தூர் பார்ப்பனர்கள் மிகப் பெரிய குண்டோதரன்களாயும் இருக்கின்றார்கள், ஏனெனில் கும்பகோணம் பார்ப்பனர்கள் எட்டு ஆடுகளை உயிரோடு வதைத்துச் சுட்டுப் பொசுக்கித் தம் பாழும் வயிற்றிற்குள் கொட்டினார்கள்.  ஆனால் கருப்பத்தூர் அக்கிரகாரப் பேய்களோ நாளொன்றுக்கு ஒவ்வொராடாக 30 ஆடுகளை விதையைப் பிடித்து நசுக்கி இரத்தத்தை உறிஞ்சி, மாமிசத்தைச் சுட்டுத்தின்று யாகத்தின் பெயராலும், வேதத்தின் பெயராலும் ஒரே அடியாய் விழுங்கப் போகின்றன.  என்ன கொடுமை! என்ன அக்கிரமம்!  பார்ப்பனர்கள் இத்தகைய கொலை பாதகர்களாய் இருக்கின்றமை-யாற்றான், புத்தர் பெருமான் இப்பார்ப்-பனர்களைப்பற்றி,

கொலையறமா மெனும்

கொடுந்தொழில் மாக்கள்

என்று கூறி அவர்களை மனிதப் பிறவியில் சேர்க்காது மிருகப் பிறவியில் சேர்த்தார்.  இத்தகைய மிருகப் பிறவியைச் சார்ந்து கொலைத்தொழில் புரியும் பார்ப்பன மாக்களை இன்னும் நம்மவர்களில் பலர் உயர்ந்த ஜாதியார் என்று கருதி அவர்கள் காலடியில் விழுந்து, அக்கால் கழுவிய அழுக்குத் தண்ணீரைத் தாம் குடிப்பதோடு தம் பெண்டு பிள்ளைகளையும் குடிக்கச் செய்கின்றனரே! அந்தோ! என்னே இவர்கள் தம் அறியாமை!

குடிஅரசு  18.7.28  பக்கம் 15
தகவல் ‘முநீசி’

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *