மாட்டுக்கறி சாப்பிடும் நாடுகளிலெல்லாம் மண் சரிவு ஏற்படுகிறதா?

2024 Uncategorized ஆகஸ்ட் 16-31
1. கே: திராவிட மாடல் அரசு பற்றி குறை கூறமுடியாத நிலையில், திட்டமிட்டுப் பழிகளைச் சுமத்துவது தொடர்வதால், மகள்களுக்கு இதுகுறித்துத் தெளிவு உண்டாக்கி, சதியை முறியடிக்க வேண்டியது கட்டாயம் அல்லவா?
– ஆர். புவனேஸ்வரி, சூளை.
ப: அதுதான் பிரச்சாரங்கள், அறிக்கைகள், பேட்டிகள் மூலம்
பரவலாக அத்துணை முற்போக்
காளர்களாலும் செய்யப்பட்டு வருகின்றது.
2. கே: போலிப் பத்திரப் பதிவை மாவட்டப் பதிவாளரே ரத்து செய்யும் சட்டப் பிரிவை, சட்டவிரோதமாக உயர்நீதிமன்றம் கருதி உத்தரவிட்டது சரியா?
– கு. சாந்தி, குடியாத்தம்.
ப: அந்த அதிகாரம் அவர்களுக்கு வழங்குவதால் பல தவறுகளுக்கு இடம் அளிக்க வாய்ப்புண்டு என்பதால்- மேல் முறையீட்டு அதிகார அதிகாரிகள் செய்வதே சரியானதாக இருக்கலாம். (அதைவிட ஒரு தனி விசாரணை அமைப்பு இருந்தால் சிறப்பானதாக இருக்கும்.)
3.  கே: தி.மு.க. தலைமையிலான கூட்டணியை உடைக்க சதி நடக்கும் நிலையில் கார்த்திக்  சிதம்பரம் போன்றவர்களின் தான்தோன்றித் தனமான பேச்சைக் கட்டுப் படுத்த வேண்டியது கட்டாயம் அல்லவா?
– வி.கே. ராம், காரைக்குடி.
ப: அது காங்கிரஸ் கட்சித் தலைமையின் பணி.
கார்த்திக் சிதம்பரம்
4. கே: “அத்துமீறும் இலங்கைக் கடற்படையினரைக் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும்” என்ற திருமாவளவனின் கருத்து சரிதானே? ஒன்றிய அரசு செய்ய இயலுமா?
– கி.யமுனா, காஞ்சிபுரம்.
திருமாவளவன்
ப : 100க்கு 100 சரியானது. முன்பு இத்தாலிய மாலுமிகள் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி வழக்கு முன் முன்மாதிரியாய் உள்ளதே! எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட
வர்கள் அல்லவே!
5. கே: வயநாடு பேரழிவை, ‘தேசியப் பேரிடராக’ அறிவிக்க மறுக்கும் மத்திய அரசின் அளவுகோல்தான் என்ன? அதை அறிவிக்க வேண்டாமா?
– வி. காயத்ரி, அசோக்நகர்,
ப: இப்போதுதான் கேரளா சென்றுள்ளார் பிரதமர் மோடி- பொறுத்திருந்து பார்க்கலாமே!
6. கே: “ஒன்றிய பா.ஜ.க. அரசே தேசியப் பேரிடர்தான்” என்ற கனிமொழியின் கருத்து மிகச்
சரியானது தானே?
– பூ. செந்தில், திருப்பூர்.
வயநாடு பேரழிவுக் காட்சி
ப : அது சரியானது என்று தான் நாடே சொல்லுகிறதே! கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?
7. கே: “ பசுக்களைக் கொன்றதால்தான் வயநாட்டில் நிலச்சரிவு” ஏற்பட்டது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் கியான்தேவ் கூறியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– த. உமா, திருச்சி.
ப: அப்படியா? மாட்டுக்கறி சாப்பிடும் உலக நாடுகளில் எல்லாம் எந்தச் சரிவு ஏற்பட்டிருக்கிறது? இதனால் விலைச்சரிவு வேண்டு
மானால் இறைச்சி உணவுக்கு ஏற்பட்டிருக்கலாம்!