பதிவுகள்

பிப்ரவரி 16-28
  • இந்தியக் கடற்படைக்காக இத்தாலியிலிருந்து புதிதாக வாங்கப்பட்ட அய்.என்.எஸ். தீபக் டேங்கர் கப்பல் ஜனவரி 21 இல் முறைப்படி கடற்படையில் சேர்க்கப்பட்டது.
  • ஆஸ்திரேலியப் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ், அவரது இரு மகன்களை ஜீப்புடன் தீவைத்துக் கொலை செய்த குற்றவாளி தாராசிங்குக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஜனவரி 21 இல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி ஜனவரி 24 இல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
  • வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பண விவரத்தை வெளியிட முடியாது என்று மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி ஜனவரி 25 இல் அறிவித்துள்ளார்.
  • தேவேந்திர குல வேளாளர் என்ற பிரிவில் 7 உட்பிரிவுகளை இணைப்பதுபற்றிய பிரச்சினை குறித்துப் பரிசீலிப்பதற்காக நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் கமிசனை நியமித்து, முதல் அமைச்சர் கலைஞர் ஜனவரி 26 இல் ஆணையிட்டுள்ளார்.
  • தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயரை வைப்பதற்கு ஜனவரி 27 இல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • திருப்பூர் பகுதியில் உள்ள அனைத்துச் சாயப்பட்டறைகளையும் உடனடியாக மூடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 28 இல் உத்தரவிட்டுள்ளது.
  • தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு ஜனவரி 28 இல் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
  • சாக்கடை அள்ளுவது மற்றும் அடைப்புகளை நீக்குவதற்கு மனிதர்களைப் பயன்படுத்துவதுபற்றிய சட்டத்தைக் கண்டிப்புடன் அமல்படுத்துவதற்கான திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பிப்ரவரி 1 இல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மியான்மரில் பிப்ரவரி 4 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 3 துணை அதிபர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும்  புதிய அதிபராக பிரதமர் தீன்சேன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • நேபாளத்தின் புதிய பிரதமராக ஜலநாத் கன்னல் பிப்ரவரி 3 இல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அமெரிக்கத் தயாரிப்பான சி 130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விமானம் இந்திய விமானப்படையில் பிப்ரவரி 5 இல் இணைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *