நூல்
நூல் : சிங்காரவேலர் என்ற மாமனிதர்
ஆசிரியர் : புலவர் பா.வீரமணி
வெளியீடு : அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்,
96 பெரியார் சாலைபாலவாக்கம், சென்னை 41
பக்கங்கள் : 16 ரூ.130/-_
1920களில் பவுத்தம், மார்க்சியம், டார்வினியம் குறித்து எழுதியவர்; மார்க்சின் மூலதனத்தை சுருக்கமான விளக்கமாகத் தமிழில் எழுதியவர்; விண்மீன்களும் அணுக்களும், கடவுளும் பிரபஞ்சமும் உள்ளிட்ட அறிவியல் நூல்களைப் படைத்தவர்; பெரியாரின் நண்பராக விளங்கியவர் சிந்தனைச் சிற்பி எனப் போற்றப்படும் சிங்காரவேலர்.
சிங்காரவேலர் பற்றி பல கட்டுரைகள்,நூல்கள் எழுதியுள்ள புலவர் பா.வீரமணியின் செறிவான தகவல்கள் அடங்கிய நூல் இது. சென்னை நகராண்மைக் கழகத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது கடவுள் பெயரால் உறுதியேற்கிறேன் என்று கூறாமல்,` மனச்சான்றின் அடிப்படையில் பொறுப்பேற் கிறேன் என்று உறுதியெடுத்த சிங்காரவேலர்தான் தமிழகத்தில் இப்படி உறுதிமொழிந்த முதல் பகுத்தறிவாளர் என்கிறார் நூலாசிரியர். முதலாவது மே நாள் கொண்டாட்டம், தலித்துகளின் வழிகாட்டி, சமூக அக்கறை, பெண்ணுரிமைச் சிந்தனை என சிங்காரவேலரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ஆதாரங்ளுடன் வழங்குகிறது இந்நூல்.
குறும்படம்
Daddy
நிச்சயமாக நாம் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வைக் கண்டோ அல்லது கேட்டோ இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். பள்ளிக்குச் செல்லும் தாயில்லாத, தாதியின் பராமரிப்பில் இருக்கும் ஒரு குழந்தை. பணம்! பணம்! என்று வியாபாரத்தில் மூழ்கியிருக்கும் தகப்பன்.
குழந்தை தூங்கிய பிறகு வீட்டிற்கு வந்து, குழந்தை விழிப்பதற்கு முன்பே வெளியே சென்றுவிடும் அப்பாவை நேரில் சந்தித்து பேச ஆவலோடு இருந்து, ஆவல் நிறைவேறாமல் சோகமாக, தன் தாதியிடம் தன் தாயின் புகைப்படத்திற்கு ஏன் மாலையிடப்பட்டிருக்கிறது என்று கேட்கும் போது, தாதி, தாய் ரொம்ப தூரமாக சென்றிருக்கிறார் அதனால்தான் என்று கூறுகிறார்.
அதைக்கேட்டு, குழந்தை என்ன நினைத்ததோ, உயிரோடு இருக்கும் தன் அப்பாவின் புகைப்படத்தை எடுத்து வைத்து அதற்கும் மாலை போடுகிறாள். குறும்படம் நிறைவடைகிறது.
தாயிழந்த, தந்தையின் அரவணைப்பை இழந்த குழந்தையின் ஏக்கத்தின் தாக்கத்தை நன்றாக உணர்த்துவதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
இயக்குநர் பெயர்: ஸ்டீபன்
தொ.எண்: 89032 67440
இணையம்
www.thirukkural.com
திருக்குறளுக்கென்றே தனியாக வடிவமைக்கப் பட்டுள்ள இணையதளம். முகப்புப் பக்கத்திலேயே 133 அதிகாரங்களின் தலைப்புகளும் உள்ளன. அதனைச் சொடுக்கினால் அந்த அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களுள் கலைஞர் கருணாநிதி, மு.வ., சாலமன் பாப்பையா, பரிமேழலகர், மணக்குடவர் ஆகியோரின் உரைகளுடன் தனிப்பக்கங்கள் விரிகின்றன.
இத்துடன் ஒவ்வொரு குறளுக்கும் இங்கிலீஷ் மொழியாக்கத் துடன் அதன் பொருளுரையும் தரப்பட்டுள்ளன. இதுபோக அதிகார அகரவரிசை,முப்பால் பிரிவுகள், குறட்பாவின் எண் என எந்த முறையிலும் குறளைத் தேடிப்படிக்கும் வாய்ப்பையும் இந்த இணையதளம் அளிக்கிறது. அமெரிக்காவில் வாழும் ஜெ.கார்த்திக் என்பவரின் இந்தப் பணியைத் தமிழுலகம் வாழ்த்தும்.