1) 1933இல் நாகம்மையாரின் இறப்புச் செய்தி பற்றி பெரியாருக்கு எந்த ஊரில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது?
அ) ஈரோடு ஆ) ஜோலார்பேட்டை இ) மயிலாடுதுறை ஈ) தஞ்சாவூர்
2) “கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்கால்களுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிப்பிட்ட ஒரு மரப்பட்டை இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்துகொண்டிருக்கிறார். தண்டனை அடைந்த சாதாரண கைதி எவ்வளவு வேலை செய்வானோ அது போல் இருமடங்கு வேலை செய்கிறார். வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறையில் இருந்த பெரியார் ஈ.வெ.ரா. பற்றி இவ்வாறு தம் வரலாற்றில் எழுதியவர் யார்? அ)கே.பி.கேசவமேனன் ஆ)டி.கே.மாதவமேனன் இ) கேளப்பன் ஈ) கோவிந்தன் சாணார்
3) வைக்கம் மகாதேவர் ஆலயத்திலிருந்து 100 கெஜ தூரத்தில் ஒரு விளம்பரப்பலகையில் எழுதப்பட்டிருந்த வாசகம்
அ) தீண்டத்தகாதவர்கள் இங்கிருந்து கும்பிடலாம் ஆ) தீண்டத்தகாதவர்கள் இதற்கப்பால் பிரவேசிக்கக் கூடாது
இ) தீண்டத்தகாதவர்கள் மேலாடையின்றி உள்ளே போகலாம் ஈ) தீண்டத்தகாதவர்கள் கழுத்தில் கலயத்தைக் கட்டிக் கொண்டுப் போகலாம் 4) சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராக எழுதிய ஏடுகள் எவை?
அ) தார்மீக இந்து , தி இந்து ஆ) தமிழ்நாடு, தேசபந்து இ) நவசச்தி, சுதேசமித்திரன் ஈ) தினசரி, தி மெயில்
5) 1927ல் வடமொழி ஆகமங்களிற் சிலவற்றைத் தமதெனக் கொண்டு பிறப்பால் சாதிவேற்றுமைகள் கற்பித்தும் சிவாலயங்களிற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கியும் வருகின்ற சைவர்களும் ஞானசூரியன் கிரகணங்களின்று தப்பவில்லை. தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு ஜாதியார் என்று சொல்லிக் கொள்ள விரும்புவாராயின் அச்சைவர் வடமொழி ஆகமங்களைத் தமதெனக் கொள்ளும் தவறை ஒழித்தலும் சிவாலயங்கள் சிலவற்றில் காணப்படும் சிவலிங்க உருவினை மாற்றலும் இன்றியமையாதவை என விழுமிய கருத்து தெரிவித்த பெரியாரின் நண்பர் யார்?
அ)குன்றக்குடி அடிகளார் ஆ) மறைமலைஅடிகள்
இ) திரு.வி.க. ஈ) வ.உ. சிதம்பரம் (பிள்ளை)
6) செங்கற்பட்டு சுயமரியாதை மாநாடு எப்போது நடைபெற்றது?
அ) 17, 18.2.1929 ஆ) 17, 18.2.1928
இ) 27, 28.2.1929 ஈ) 10, 11.3.1930
7) சமத்துவம், சகோதரத்துவம், பிறப்பில் உயர்வு தாழ்வின்மை, பெண் சுதந்திரம் முதலிய அரிய நீதிகளைப் போதிக்கும் சிறந்த பண்டைத் தமிழ் நூலாகிய … உரையுடன் 8 அணாவிற்கு கொடுக்கின் றோம், தேவைக்கு உடனே எழுதுங்கள். தாமதித்தால் கிடைக்காது என்று குடிஅரசு பதிப்பகம் 1929இல் கூவி விற்ற நூல் எது?
அ) சிலப்பதிகாரம் ஆ) திருக்குறள்
இ) முத்தொள்ளாயிரம் ஈ) கல்லாடம்
8) எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா? நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? வெள்ளைக் காரர்களால் இந்தியருக்குச் செல்வம் பெருகுமா? பார்ப்பனர்களால் பார்ப்பனர் அல்லாதாருக்குச் சமத்துவம் கிடைக்குமா? இந்தக் கேள்விகளைக் கேட்டுப் பெரியார் வற்புறுத்தும் உண்மை யாது?
அ) ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது ஆ) வெள்ளையர்களால் கறுப்பர்களுக்கு உரிமை வராது
இ) மதவெறியர்களிடம் இருந்து மனிதநேயம் பிறக்காது
ஈ) இவை எவையும் அல்ல.
9) கொசுவலை உபயோகிப்பதால் நாம் கொசுக்களுக்குத் துவேஷிகளாகிவிடு வோமா? மூட்டைப் பூச்சி கடிக்கா மலிருப்பதற்கு நம் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வதால் நாம் மூட்டைப் பூச்சி துரோகிகள் ஆகிவிடுவோமா? எந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலாக பெரியார் இந்த எடுத்துக்காட்டுகளைக் கூறுகிறார்?
அ) வகுப்புரிமையை விடாது வலியுறுத்துகிறார் ஆ) பார்ப்பனர்களை வெறுப்பவர்
இ) மதத்தை மறுப்பவர் ஈ) கடவுள் சிலைகளை உடைப்பவர்
10) பெரியாரால் ஆதரிக்கப்பட்ட ஒரு தமிழக முதலமைச்சர் இவ்வாறு கேட்டார்: எந்தத் தாழ்த்தப்பட்ட டாக்டர் தவறாக ஊசிபோட்டதால் நோயாளி மாண்டு விட்டார் என்று காட்டுங்கள், எந்தத் தாழ்த்தப்பட்ட பொறியியல் அதிகாரி கட்டிய முறையால் எந்தக் கட்டடம், இடிந்து விழுந்துவிட்டது என்று காட்டுங்கள். இப்படிக் கேட்டவர் யார்?
அ) ஓமந்துர் ராமசாமி (ரெட்டியார்) ஆ) காமராசர் இ) அறிஞர் அண்ணா ஈ) கலைஞர் மு. கருணாநிதி
ஜூன் 16-_30 இதழில் வெளியான பெரியாரை அறிவோமா கேள்விகளுக்கான விடைகள்
1.அ, 2.அ, 3.அ, 4.அ, 5.ஆ, 6.ஆ, 7.இ, 8.அ, 9.ஈ, 10.இ.