(யூதர்கள் இரகசிய அறிக்கை)
இரகசிய போலீஸ் நடவடிக்கையை நியாயப்படுத்த வேண்டிய தேவை ஏற்படும்போது (தேசத்தின் மரியாதைக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயம்) நம்முடைய பேச்சாளர்களின் துணையைக் கொண்டே நாட்டில் சில குழப்பங்களையும் சச்சரவுகளையும் செயற்கையாகத் தூண்டிவிட வேண்டும். அந்தப் பேச்சாளர்களின் சொற்களால் கவரப்பட்டவர்கள் அவர்களைச் சுற்றி ஒன்று கூடுவார்கள். அந்த நிகழ்வை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டு, மக்களை இரகசியமாகக் கண்காணிக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, கோயிம் போலீசாரைக் கொண்டு அதைச் செய்யலாம்.
பெரும்பாலும் சதித்திட்டங்களில் ஈடுபடுவோர், அந்தச் செயலினால் கிடைக்கும் திகிலுக்காகவும், இரகசியமாகப் பேசுவதற்காகவும்தான் செயல்படுகிறார்கள். பெரிய அளவில் அவர்கள் ஏதேனும் செய்யும் வரையில், அந்தச் சதிகாரர்கள் மீது நம் பக்கத்தில் இருந்து சிறு துரும்பும்படக் கூடாது. அவர்களைக் கண்காணித்து மட்டுமே வர வேண்டும். இதில், முக்கியமாக ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, ஓர் அரசுக்கு எதிராகச் சதித்திட்டங்கள் அடிக்கடி நிகழ்த்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், எந்த அளவுக்கு அது குறித்த செய்திகள் வெளி
வருகின்றனவோ அந்த அளவுக்கு அரசின் மீதான மதிப்பும் குறைந்துவிடும். அது எதைக் குறிக்கிற தென்றால், அரசாங்கம் மிகவும் பலவீனமாக உள்ளது என்பதையும், அதைவிட மோசமாக,
அந்த அரசாங்கம் அநீதியானது என்பதையும்தான்.
கோய் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக நம்முடைய ஏஜெண்டுகளால் படுகொலை செய்யப்படுகிறார்கள். அவ்வாறாகத்தான், கோய் அரசாங்கத்தின் கண்ணியத்தை நாம் சீர்குலைக்கிறோம். நம்முடைய கோயிம் ஏஜெண்டுகளில் பலர் ஆட்டு மந்தைக்கு ஒப்பானவர்கள். அரசியல் சாயம் பூசப்பட்ட சில உணர்ச்சிகரமான வாக்கியங்களை அவர்களிடம் கூறினாலே போதும், உடனே அவர்கள் வன்செயலில் ஈடுபடத் தயாராகி விடுவார்கள். இதனால், கோய் ஆட்சியாளர்கள் இரகசியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தங்களைத் தற்காத்துக்கொள்ள முயல்வார்கள். அந்த ரகசியப் பாதுகாப்பு நடவடிக்கையை வெளிப்படுத்துவதன் மூலம், தாமாகவே நமது பலவீனத்தை ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆட்சியாளர்களைத் தள்ளுகிறோம். நமது வாக்குறுதியின்படி, அவர்களின் அதிகாரத்தை அழிவுப் பாதையை நோக்கி இட்டுச்செல்கிறோம்.
ஆனால், நமது ஆட்சியாளர்களோ இரகசிய மெய்க்காவலர்கள் மூலம் மட்டுமே பாதுகாக்கப்படுவர். ஏனெனில், நமது ஆட்சியாளருக்கு எதிராக எந்த எதிர்ப்பும் இல்லையென்று காட்ட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஆட்சியாளர் தமது எதிரிகளை எதிர்கொள்ள வலிமை இல்லாமல் மறைந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்று மக்கள் கருதுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது.
மாறாக, அதுபோன்ற ஒரு கருத்து மக்கள் மத்தியில் பரவுவதற்கு நாம் அனுமதித்தால், கோயிம்கள் செய்ததைப் போல, நமக்கு நாமே சவக்குழி வெட்டிக்கொள்ள வேண்டியதுதான். ஆம், அந்த ராஜ்ஜியத்தின் அழிவு வெகு தொலைவில் இருக்காது.
பயந்து வாழும் அரசாங்கம்
நமது ஆட்சியாளர் தமது அதிகாரத்தை தேசத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துவார். தமது சொந்த நலனுக்காகவோ, தமது ராஜ்ஜியத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவோ பயன்படுத்த மாட்டார். இதனால், அவருடைய ஆட்சி மக்களால் மதிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, ஆட்சியாளர் மக்களாலேயே பாதுகாக்கப்படுகிறார் என்பது போன்ற தோற்றத்தை உண்டாக்க வேண்டும். இது நாம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய வெளித்தோற்றக் கொள்கை. மக்களாலேயே ஆட்சியாளர் பாதுகாக்கப்படுகிறார் எனும் போது, அந்த ஆட்சி குறித்து மக்களிடையே தெய்வீகத்தன்மை வாய்ந்த மதிப்பு ஏற்படுகிறது. ஆட்சியாளரின் நலன், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் நலனோடும் பின்னிப் பிணைந்ததுஎன்றும், அவருடைய நலனைப் பொறுத்தே ஒட்டுமொத்த சமூகத்தின் நலனும் அமைந்துள்ளது என்பதையும் அது பறைசாற்றுகின்றது.
எப்பொழுது ஆட்சியாளர் அதிக மெய்க்காவலர்களால் சூழப்படுகிறாரோ, அப்பொழுது அவர் பலவீனமானவர் என்றும், வலிமை இல்லாதவர் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
நம் ஆட்சியாளர் மக்களில் ஒருவராகவே எப்பொழுதும் காட்சியளிப்பார். அவரைச் சுற்றி ஆவலான ஆண்களும் பெண்களும் கூட்டமாகக் குழுமியிருப்பர். அதில் ஒரு கூட்டம் அவருக்கு மிகவும் அருகில் நெருக்கமாக இருக்கும். அது எதார்த்தமாகக் கூடிய கூட்டத்தைப் போன்று காட்சியளித்தாலும், உண்மையில் அது மற்ற மக்களிடமிருந்து ஆட்சியாளரைப் பாதுகாக்கக்கூடிய அரணாகவே விளங்கும். முதல் வரிசையில் கூடியிருக்கும் அந்தக் கூட்டம். மரியாதை நிமித்தமாகவே அரசரிடமிருந்து மற்றவர்களைத் தடுப்பது போல் இருக்க வேண்டும். மக்களிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்தவும் நமது இந்தத் தடுப்பு ஏற்பாடு உதவும். முதல் வரிசைக்காரர்களின் நடவடிக்கையைப் பார்த்து மற்ற மக்களும் சுயகட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள அது ஊக்கமாக அமையும்.
யாரேனும் ஒரு மனுதாரர் கூட்டத்தில் தோன்றி, கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆட்சியாளரிடத்தில் மனு கொடுக்க வந்தால், முதல்படி நிலையில் உள்ளவர்கள் அந்த மனுவைப் பெற்று, மனுதாரரின் கண்கள் முன்னிலையிலேயே அரசரிடம் அதை அளிப்பர். இதன் மூலம், தாம் எந்தக் கோரிக்கை வைத்தாலும், அது ஆட்சியாளரின் கைகளுக்குச் சென்று சேர்கிறது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும். அதனால் ஆட்சியாளரின் கையில்தான் எல்லாக் கட்டுப்பாடுகளும் இருப்பதாக மக்கள் எண்ணுவர். ‘அரசருக்கு இதைப் பற்றித் தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா?’, ‘இந்தப் பிரச்சினையை அரசரின் காதுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும்’ என்பன போன்ற வாசகங்களை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும். அதுதான், அரச அதிகாரத்திற்குப் புனிதத்தன்மை ஏற்பட முதன்மை விதியாகும்.
மெய்க்காவலர்கள் வெளிப்படையாக நியமிக்கப்பட்டால், அது அதிகாரத்தின் புனிதத் தன்மையையும், கண்ணியத்தையும் போக்கிவிடும். எதிராளியின் மனதில் துணிச்சலை ஏற்படுத்துவதோடு, எல்லோரும் தன்னைப் பெரியவன் என்று கருதிக்கொள்வதற்கு இடமளிப்பதாக ஆகிவிடும். அதன்பிறகு கலகக்காரர்கள் தங்கள் பலத்தை உணர்ந்து கொண்டு, நேரம் வாய்க்கும் போது, ஆட்சியாளரைக் கொல்ல முயல்வர். கோயிம் ஆட்சியாளர்களுக்கு, அவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் இதற்கு நேர்மாற்றமான அறிவுரையை நாம் வழங்கி வந்தாலும், நடைமுறையில் அது என்ன வகையான விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
நம் ஆட்சியைப் பொறுத்தவரை, நமக்குள் இருக்கும் கருப்பு ஆடுகள் முதலில் கைது செய்யப்படுவர். கூடுதலாகவோ குறைவாகவோ, அந்த நபர் சந்தேகத்திற்குரியவராக இருந்தாலே
போதும், அவர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாம் சில சமயம் அப்பாவிகளைக் கூட தவறாகக் கைது செய்துவிட வாய்ப்புள்ளது. ஆனால், அதற்காகப் பயந்துகொண்டு சந்தேகத்திற்
குரியவர்களைக் கைது செய்யும் பணியை விட்டுவிடக்கூடாது. அப்படிச் செய்தால், அரசியல் எதிரிகள் தப்பிப்பதற்கு வாய்ப்பு
அளிப்பது போன்றதாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் விஷயத்தில் கிஞ்சித்தும் கருணையோடு நடந்து கொள்ளக்கூடாது. சாதாரண குற்ற வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்பை, குற்ற நோக்கின் அடிப்படையில் மறு ஆய்வு செய்யச்சாத்தியமுண்டு. ஆனால், அரசியல் குற்றங்களைப் பொறுத்தவரை அதில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஏனெனில், அரசியல் குற்றம் எவ்வளவு பாரதூரமானது என்பதை ஓர் அரசாங்கத்தால்தான் அறிய முடியும். நடைமுறையில், எல்லா ஆட்சியாளர்களும் உண்மையான அரசியலைப் புரிந்துகொள்வதில்லையே!
(தொடரும்…)