அறிஞர் அண்ணா பிறப்பு -15.09.1909

2023 செப்டம்பர் 1-15,2023

இந்தியாவிலேயே வேறு யாராலும் சாதிக்க முடியாத காரியத்தை அண்ணா அவர்கள் சாதித்துக்காட்டினார். நமக்குத் தெரிந்த வரையில் வேறு யாரும் அந்த அளவுக்குச் சாதிக்கவே இல்லை. ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை – கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், சாதி வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம் என்ற ஒரு கொள்கையுடைய பகுத்தறிவு அரசாங்கத்தை – அண்ணா அவர்கள் தோற்றுவித்தார் என்றால் அது சாமானிய காரியமல்ல பிரமாண்டமான சாதனையாகும்.
நம் மக்களுக்கு இது சரியாகப் புரிகிறதோ இல்லையோ, எதிரிகளுக்கு இது தெளிவாகப் புரியும்.