எச்சரிக்கைத் தொடர் – இளைஞர்களை பாழாக்கவேண்டும்! (யூதர்கள் இரகசிய அறிக்கை)

2023 ஆகஸ்ட் 16-31,2023 கட்டுரைகள்

நமக்கான காலம் வந்து, நம் அரசாங்கஅலுவல் பதவிகளில் யூதச் சகோதரர்களை நியமிக்கும் வரை, அந்த இடங்களில் குற்றப் பின்னணியை உடைய கிரிமினல்களை நியமிக்க வேண்டும். அவர்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாதவர்களாக இருப்பார்கள். மக்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான தொடர்பு, மலைக்கும் மடுவுக்குமானதாக இருக்கும். மேலும், அந்த அதிகாரிகள் நமது கட்டளைகளை ஏற்று நடக்க மறுத்தால், உடனே அவர்களின் குற்றப் பின்னணி தோண்டி எடுக்கப்படும். ஒன்று, அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் அல்லது எங்கேனும் ஓடி ஒளிந்து கொள்ளவேண்டும். வேறு வழியில்லை. தம் கடைசி மூச்சு வரை, நமக்காகச் சேவகம் செய்யவும் நம் விருப்பத்திற்கு அடிபணிந்து நடக்கவும் அவர்களுக்காக நாம் செய்துள்ள முன்னேற்பாடு இது.

கல்வித் திட்டத்தைக் கைப்பற்ற வேண்டும்

நமது திட்டங்களை எந்த இடத்தில் செயல்படுத்துவதாக இருந்தாலும், அதற்கு முன்னால் அந்த நாட்டு மக்களின் பண்பு, நலன்கள், நாகரிகம், பண்பாடுகள் உள்ளிட்டவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நம் கொள்கைகளை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான வடிவத்தில் செயல்படுத்தினால் நமக்கு வெற்றி கிட்டாது. அதற்கு முன்னால், தகுந்த கல்விப்பயிற்சி அளித்து, மக்களை நம் கொள்கையின்பால் வென்றெடுப்பதோடு, செயல்திட்டத்திற்குத் தகுந்தாற்போல் அவர்களைப் பயிற்றுவிக்கவும் வேண்டும். நான் மேற்குறிப்பிட்டுள்ள இந்த விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதை நீங்கள் சிரத்தையுடன் செயல்படுத்தும் பட்சத்தில், அதன் வெற்றியைக் கண்கூடாகப் பார்க்கலாம். பத்தாண்டு காலத்திற்குள்ளாக, மிகக் கடினமான பேர்வழிகூட நம் வழிக்கு மாறி வருவதைக் காண்பீர்கள். அதன் பின்னர்,அந்நாட்டு மக்களை நம்மால் வென்றெடுக்கப்-பட்டவர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அதில் நமக்கு எந்தத் தயக்கமும் இருக்க வேண்டியதில்லை.

கோயிம்களின் கல்வி நிறுவனங்களை அழிப்பதற்காக, நாம் அதற்குள்ளாக ஊடுருவி விட்டோம். காலம் கடப்பதற்குள்ளாக இந்த வேலையை முடிக்கும் பொருட்டு, தந்திரமாகவும் மிக நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மூலம் அவர்களை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம். கல்வித் திட்டம், ஒரு ஸ்பிரிங்கில் இயங்கும் இயந்திரம் என்று வைத்துக்கொண்டால், அந்த ஸ்பிரிங்குகளோ சீரான முறையிலும், மிகவும் ஒழுங்கான முறையிலும் இயங்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், நாமோ அவற்றில் லிபரலிசம் என்னும் குழப்பத்தைப் புகுத்திவிட்டோம். நிருவாகம் செய்வது எப்படி, தேர்தலை நடத்து எப்படி, பத்திரிகைத் துறையில் இயங்குவது எப்படி, தனி மனித சுதந்திரம் போன்ற விஷயங்களில் ஏற்கனவே நமது கைங்கரியம் உள்ளது. ஆனால், கல்விப் பயிற்சி அதைவிட முக்கியமானது. காரணம், அது கொள்கை ரீதியானது. அதுவே நம் சுதந்திரச் செயல்பாடுகளுக்கு அடித்தளமானதும்கூட.

இளைஞர்கள் பாழாக்கப்படுவர்

வேண்டுமென்றே திரிக்கப்பட்ட தவறான கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து கோயிம் இளைஞர் சமுதாயத்தை மூடர்களாக்கியும் குழம்பிய நிலையிலும் ஆக்கி வைத்திருக்கிறோம். அவர்களுடைய உள்ளங்கள் பாழ்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்தகைய சித்தாந்தங்களைத் திரும்பத் திரும்பப் போதனை செய்து வருவதால் அவர்களின் இதயங்களில் அது ஆழ வேரூன்றிவிட்டது.

ஆட்சியாளர்கள்

ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டியவர்களை நாமே தீர்மானிப்போம். நாம் கைநீட்டுபவரே அதிபர் ஆவார். அவர் நம் திட்டங்களை நிறைவேற்றுவார். அதில் எந்தத் தடையும் இருக்காது. காரணம், நம்மால் அதிகாரப் பதவியில் அமர்த்தப்பட்ட பொம்மை அதிபர் நம் திட்டங்களைக் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துவார்.

நம்முடைய திட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால், குற்றப் பின்னணி உடைய,வெளிவராத இரகசியங்களைக் கொண்ட மோசமான வேட்பாளர்களே அதிபராக வேண்டும். அதற்குச் சாதகமான முறையில் தேர்தல் அமைப்பை உருவாக்க வேண்டும். அதிபரான பிறகு, தங்களுடைய இரகசியங்கள்
எந்நேரம் வேண்டுமானாலும் அம்பலப்படுத்தப்படும் என்கிற அச்சம் காரணமாகவும் பதவி மூலம் கிடைக்கும் லாபங்கள், மரியாதை, சிறப்பு உள்ளிட்டவற்றை ஒருகாலும் இழப்பதற்கு துணியாத நாறகாலி ஆசை காரணமாகவும், நாம் ஏவியபடி அவர்கள் காரியங்களை ஆற்றுவார்கள். நம் செயல்திட்டங்களை நிறைவேற்றும் நம்பகமான ஏஜெண்டுகளாக அவர்கள் திகழ்வார்கள். மக்கள் பிரதிநிதிகள் அதிபரை தேர்வு செய்து, அவருடைய நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு அளித்து, அவரைக் கண்காணித்து வருவார்கள். ஆனால், மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து சட்டமியற்றும் அதிகாரம், சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் அதிகாரங்கள் அனைத்தும் விரைவில் பறிக்கப்படும். நம் பொறுப்பில் உள்ள பொம்மை அதிபருக்கு அந்த அதிகாரங்களால் இயற்கையாகவே பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு அவர் இலக்காகலாம். அதனால், அவர் தம்மைத் தற்காத்து கொள்ளும் வகையில் அவருக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்போம். அது, அவர் மக்களை நேரடியாகத் தொடர்புகொண்டு பேசும் முறை. அதிபர் எடுக்கும் முடிவைப் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்டால் அதுவே போதும் என்ற முறை. புரியும்படி சொல்வதென்றால், கண்மூடிக் கூட்டமான நம் அடிமைகளிடம் நாம் உருவாக்குகிற கருத்தின் அடிப்படையில் எடுக்கப்படக்கூடிய அதிபரின் தனிப்பட்ட முடிவு.

ஆனால் அதிகாரப்பூர்வ மொழியில் சொல்வதென்றால், மக்களின் ஒப்புதல் பெற்ற முடிவு. இந்த முறையில் செயலாற்றும்போது அதிபரின் தனிப்பட்ட முடிவு பெரும்பான்மை பிரதிநிதிகளின் முடிவை விட மேலோங்கிவிடும். இது தவிர, போர் தொடுக்கும் உரிமையையும் அதிபருக்கு வழங்குவோம். அதிபர்தான் இராணுவப் படையின் தலைவர் என்ற முறையில் இந்த உரிமை வழங்கப்படுவதாக மக்களிடம் கூறலாம். அரசியல் சாசனத்திற்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது. ஆகையால், அரசியல் சாசனத்தின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதியாக உள்ள அதிபருக்கும், தற்காப்பு என்ற அடிப்படையில் போர் உரிமை வழங்கப்படுவதாகக் கூறலாம்.

ஆம், அது போன்றதொரு நிலையில், ஆட்சி அதிகாரத்தின் உண்மையான சாவி நம் கையில் இருக்கும் என்பதை நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். நமக்கு வெளியே யாரும் சட்டமியற்றும் உரிமைகளைக் கொண்டிருக்க மாட்டார்கள்.

(தொடரும்)