காவலாளியா கல்?
களர் நிலத்தில்
வீட்டு மனை!
தரமற்ற கட்டுமான பொருட்கள்!
இலாப நோக்குடைய
ஒப்பந்தக்காரர்!
இவை, இவரைக்கொண்டு
கட்டிய வீடு
பல்லளிக்கும் முன்பே
நட்டுவைத்த சரலக்கல்
மௌனமாய் சிரிக்கிறது
உரிமையாளரின் மடமையை நினைத்து!
நெகிழும் நெஞ்சம்!
புறம்போக்கு நிலத்தில்
குடிசை போட்டு
ஆளும் கட்சிக்கொடி
கட்டியவரிடம்
அந்தக் கொடி பேசியது,
எங்கள் கட்சி
ஆட்சியில் இருக்கும்வரை
ஆபத்தில்லை.
அடுத்தக் கட்சி
ஆட்சிக்கு வந்தால்…?
குடிசைவாசி சொன்னார்,
அந்தக் கட்சிக்
கொடி பறக்கும்
குடிசையில்!
– முசிறி மலர்மன்னன்
அடமானத்தில்
காணாமல் போனார்
அரசமரத்தடி பிள்ளையார்
சாலை விரிவாக்கம்
கசாப்புக்காரன்
அதிகாரம் செய்கிறான்
ஆமென்
சுட்டுப் போட்டாலும்
சுரணை வராது
தத்தளிக்கும் சமூகம்
வாடிய பயிரைக்
கண்ட இடமெல்லாம்
வள்ளலார் ரியல் எஸ்டேட்
திணிக்கப்படுகிறது
மதங்கள்
ஒலிப்பெருக்கிகள்
குடிதண்ணீர் காய்ச்சிக் குடிக்கவும்
தீர்த்தம்?
கூடாரத்தில்
சில கொள்ளையர்கள்
நாடாளுமன்றம்
குறைகிறது பக்தி
பதறுகிறது
தட்சணைத்தட்டு
மாற்ற முடியும்
தேசிய கீதம்
கையூட்டு
தலை குனிந்தனர்
கடையேழு வள்ளல்கள்
கொள்ளையர் தேசம்
தடுக்கிறது
விழித்துக்கொள்ள
மூடநம்பிக்கைகள்
அடங்கிவிடும்
அம்மன் பாம்பு
ஈரோட்டு தடி
அடங்கி விடுகிறதா
அயந்தாண்டு பசி?
பிரியாணி, குவார்ட்டர்…
மண்ணைக் கவ்வியது
கோபுர கலசம்
நிழல்
ஒதுக்கும் சமூகம்
திருநங்கைகள்
ஆயிரம் உண்டிங்கு ஜாதி
அடமானத்தில்
தமிழ் மண்
மார்வாடிகள்…
– புதுவை ஈழன்
ஆயிரம் விளக்கு!
குருத் துரோகம்
இந்திரன் உடம்பில்
ஆயிரம் விளக்கு!
ஆணையிட்டான் ராமன்
அக்னியில் சீதை
ஆணாதிக்கம்!
பெற்ற மகள் சரசுவதியை
பெண்டாள நினைத்த பிரம்மா
ஆரியக் கலாச்சாரம்!
தாருகாவனத்து ரிஷிபத்தினிகளை
கற்பழித்தான் பரமசிவன்
அவன் அழிக்கும் கடவுள்!
முதல் மனைவியிருக்க…
இரண்டாந்தாரமாய் வள்ளியை
முருகன் மீது வழக்கு!
தாயைப்போல் தாரங்கேட்டு
தகப்பனால் விரட்டப்பட்ட தறுதலை
வந்தமர்ந்த இடம் குளக்கரை!
கள்ளப் பணமெல்லாம்
நல்லதாய் மாறுது
திருப்பதி உண்டியல்!
கோடி கோடியாய்
குறுக்கு வழியில் சம்பாதிக்க
நல்லத்தொழில் சாமியார்!
_காழி கு.நா.இராமண்ணா, சென்னை