பெரியாரை அறிவோமா?

மே 16-31

1)  தொடர்வண்டி நிலையப் பெயர்ப்பலகைகளில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தைப் பெரியார் நடத்திய நாள் எது?

(அ)   10-_8_-1952        (ஆ)  1-_8_-1952
(இ)   15-_8_-1952        (ஈ)   30-_1-_1952

2)    மனிதருக்கு அழகு எது என்கிறார், பெரியார்?

அ) எளிய உடை ஆ) உடல் தூய்மை இ) மானமும் அறிவும் ஈ) அடக்க ஒடுக்கம்  உ) பெண்ணியம்

3)    கற்பு என்பதைப் பெரியார் எந்த அடிப்படையில் ஆதரிக்கிறார்?

அ) சுகாதாரம், உடல்நலம், பொதுஒழுக்கம் ஆ) தமிழர் பண்பாடு இ) நற்பெயர் ஈ) பகுத்தறிவு

4)    இராமன் படத்தைப் பெரியார் கொளுத்திய போராட்ட நாள் எது?

(அ)  1-_8_-1956        (ஆ) 2_-12_-1956 (இ)  10-_3_-1971    (ஈ)  28-_2_-1971

5)    “நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் அவர் பெரியார் எனக் கூறியவர் யார்?

அ) பட்டுக்கோட்டை அழகிரிசாமி ஆ) குத்தூசி குருசாமி இ) அறிஞர் அண்ணா ஈ) கி.ஆ.பெ.விசுவநாதம்

6)    அறிஞர் ஏ.எஸ்.கே. தந்தை பெரியார் பற்றி எழுதியுள்ள நூலின் பெயர்?

அ) `தன்மானத் தலைவர் ஆ) `சீர்திருத்தச் செம்மல் இ) `சிந்தனைச் சிகரம் ஈ) `பகுத்தறிவின் சிகரம் பெரியார்

7)    “நான் செத்துப் போனால் எனக்காக அழுகின்ற ஒரு நண்பர் இருந்தால் அவர் பெரியார் ராமசாமியாகத்தான் இருக்க முடியும்; இந்நாட்டில் பெரிய காரியம் செய்தவர் பெரியார் ஒருவர்தான்! எனப் பெரியார் பற்றித் திரு.வி.க. எழுதியுள்ள நூலின் பெயர்?

அ) எனது இலங்கைச் செலவு        ஆ) மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும்   
இ) எனது வாழ்க்கைக் குறிப்புகள்   ஈ) முருகன் அல்லது அழகு

8)    “கழகத்திற்குக் கிடைத்த நல்வாய்ப்பு என  10.8.1962 ஆம் நாளிட்ட விடுதலை நாளேட்டில் பெரியார் குறிப்பிட்டது  இவருள் ஒருவர்

அ) குத்தூசி குருசாமி    ஆ) அறிஞர் அண்ணா  இ) தி.பொ.வேதாசலம்    ஈ) கி.வீரமணி

9)    “நெஞ்சு திக் திக் என்று அடித்துக் கொள்கின்றது; மெய் நடுங்குகின்றது- எழுதக் கை ஓடவில்லை. கண் கலங்கி மறைக்கின்றது; கண்ணீர் எழுத்துக்களை மறைக்கின்றது என்று யாருடைய மறைவிற்கு தந்தை பெரியார் இரங்கல் உரை எழுதியுள்ளார்?

அ) அறிஞர் அண்ணா    ஆ) சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் இ) டாக்டர் அம்பேத்கர்    ஈ) காந்தியடிகள்

10.    நீதி மன்றில் நீதிக்கும் நீதி சொல்வார்-என்று பெரியாரைப் பற்றிப் பாடல் எழுதிய கவிஞர் யார்?

அ).கவிஞர் சுரதா ஆ.)கவிஞர் ஆடலரசன் இ).கவிஞர் கண்ணதாசன் ஈ.)கவிஞர் வாணிதாசன்

 

மே- 1-15 உண்மை இதழில் பெரியாரை அறிவோமா?

கேள்விகளுக்கு விடைகள்:

விடைகள்:  1.இ, 2.ஈ, 3.ஈ, 4.இ, 5.இ, 6.அ, 7.ஆ, 8.அ, 9.ஆ, 10.ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *