100 கிலோ தங்கத்துக் காகவே தன்னை ஜெயேந்திரர் கொலை செய்ய முயன்றதாக நீதிமன்றத்தில் மயிலாப்பூர் ஆடிட்டர் ராதாகிருஷ் ணன் கூறியுள்ளார்.
காஞ்சி சங்கரமடத்தின் பக்தரான ராதாகிருஷ்ணன் 2002ல் தன் மந்தைவெளி வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த போது இருவர் வீட்டில் புகுந்து அவரை கொலை செய்ய முயன்றனர். இது தொடர்பான வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.இவ்வழக்கு விசாரணையில் ஆஜரான ராதாகிருஷ்ணன் 1988லிருந்தே தமக்கு மடத்துடன் நெருக்கம் உண்டு என்றும் 1993ல் காஞ்சி பெரியவரின் 100வது பிறந்த நாள் விழாவை கொண்டாட முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதாக கூறினார்.
அக்குழுவின் கீழ் ஏசி முத்தையா தலைமையில் அமைக்கப்பட்ட துணை குழுவில் தான் உறுப்பினராக இருந்ததாகவும் ராதா கிருஷ்ணன் கூறினார். அக்குழுவின் சார்பில் நன்கொடையின் மூலம் 100 கிலோ தங்கம் வாங்கி கோவிலின் பாகங்களில் பூசுவது என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன் 15 கிலோ தங்கம் மட்டுமே வசூலிக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட் டதாகவும் மீதமுள்ள 85 கிலோவை இறக்குமதி செய்ய அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அனுமதி அளித்ததார். பெரிய சங்கராச்சாரியரின் கனகாபிகேஷம் முடிந்ததும் 100 கிலோ தங்கம் தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் ஜெயேந்திரர் கோரியதை தான் கடுமையாக எதிர்த்ததால் தன்னை ஜெயேந்திரர் கொல்ல திட்டமிட்டதாக ராதாகிருஷ்ணன் கூறினார். பின்பு அக்குழுவை கலைத்து விட்டு தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள சுந்தரேச ஐயரின் தலைமையில் சொர்ண விமான டிரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தி அத்தங்கத்தை கைப்பற்றி தங்கமுலாம் பூசியதாகவும் கூறினார். ஆனால் முழு தங்கம் பயன்படுத்தப்பட வில்லை என்றும் பல இடங்களில் கருமையாகவும் பல இடங்களில் பித்தளையால் பூசப்பட்டதை போலவும் காட்சி யளிப்பதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.