குறைவான படிப்பறிவு உள்ளவர்கள்கூட பேராசிரியர் மருத்துவர் வெ.குழந்தைவேலு எம்.டி. அவர்கள் உண்மை இதழில் எழுதிவரும் இதயம் இதமாய் இயங்க தொடரைப் படித்து விட்டு என்னைப்போன்றோர் மனம் நிறைவடைந்தோம்.- தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
இந்த நூற்றண்டிலும் ரத்தக்காட்டேரியா…இந்தக் கொடுமைய எங்கே போய்ச் சொல்வது?டி.வி.க்கள் பெருத்துவிட்டதே மூடநம்பிக்கை அதிகரித்ததற்குக் காரணம்.சந்து பொந்துகளில் பேசிக்கொள்ளும் உப்புச் சப்பில்லாத செய்தியை எல்லாம் பெரிதாகக் காட்டுகிறார்கள்.அதனால்தான் இந்த மாதிரி மூடநம்பிக்கைகள் மக்களைப் பாழ்படுத்துகின்றன.மார்க்கண்டேய கட்ஜூ சொல்வது சரிதான்.
-கனகு.முனீஸ்வரன், கோமல்.
பாரதிதாசனின் கவிதைகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக இருந்தது.சிந்தனைத்துளிகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகப் போடலாம். – எஸ்.வள்ளிமணாளன், கோபிச் செட்டிபாளையம்.
இந்தியாவில் கிறித்துவப் பிரச்சாரம் அண்மைக்காலமாக மிக அதிகமாக செய்யப்படுகிறது.ஆனால்,அமெரிக்காவிலேயே நாத்திகர்கள் இவ்வளவு பேர் இருப்பது அறிந்து ஆச்சரியமாக இருக்கிறது.மக்கள் மதங்களின் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. – ஜோ.பெலிக்ஸ், நாகர்கோவில்.
ராமன் பாலத்தின் வண்டவாளத்தை அவர்களின் புராணத்தைக் கொண்டே தண்டவாளத்தில் ஏற்றியது அருமை. எவ்வளவுதான் சொன்னாலும் மதத்தீவிரவாதிகள் மண்டையில் உரைக்க வில்லையே?தமிழ்ப் புத்தாண்டுக்கு புதுசு புதுசாக உளறத் தொடங்கிவிட்டர்கள். ஆனால்,தமிழ்ப் புத்தாண்டின் ஒரு பெயர் கூட தமிழில் இல்லையே ஏன்? என்ற உண்மையின் கேள்விக்கு யாருமே இதுவரை பதில் சொல்லமுடியவில்லை. – ஆதி.சுப்பிரமணியன், சாலியமங்கலம்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட் டினத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை திறக்கப்பட்டது நற்செய்தியாக அமைந்தது. திரைத்துறையைச் சார்ந்த சிலரும், முகநூலில் இருக்கும் சிலரும் தங்களின் பெயர்களுக்குப் பின்னால் ஜாதியின் பெயரை சேர்த்திருப்பது அறிந்து கவலையளிக்கிறது. ஆசிரியர் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்திருப்பதையும் கண்டேன். பெயருக்குப் பின்னால் ஜாதியம் கிருமியாய் ஒட்டி வருவதை அடியோடு அகற்ற வேண்டும். – தமிழ்மாறன்.சௌ.சா, கோடாலி – 612 902
பெரியாரை அறிவோமா? என்ற பகுதியை, அறிவுத்திறன் போட்டியாக, வாசகர்களுக்கு விட்டுவிடலாமே விடையை கடைசிப் பக்கம் என்பதை தவிர்த்து, பின்வரும் இதழில் அறிவிக்கலாமே. பெரியாரைப் பற்றி என் போன்ற வாசகர்களும், இளம் வாசகர்களும், மேலும மேலும் அறிய, அவருடைய சொற்களஞ்சியம் பொக்கிஷமாக அமையும் அல்லவா, ஒரு பதிவாக இருக்கும். மேலும், அவருடைய நூல்களை தேடிப்படித்து மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்பதை ஆத்திக கொள்கையிலிருந்து விடுபட்டு பெரியாரிசம் பெரிது என்பதை இளம் தலைமுறை பறைசாற்றலாம் என்பது எனது அவா, கருத்து. – கு.ப.விசுனுகுமாரன்,சென்னை – 112