Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அரசு அலுவலகங்களில் கடவுள் பட நீக்க ஆணை தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

தமிழ்நாடு மக்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமே கல்வி, பகுத்தறிவு, ஜாதி, மத சார்பு இன்மையாகும். மக்களின் உரிமைக்கும் சமூக நல்லிணக்கத்தைக் காக்கும் வகையில் 1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது அரசு அலுவலகங்களில் கடவுள் பட நீக்கம் ஆணை பிறப்பித்தார். அவ்வாணை இன்றைய நடைமுறையில் அரசு அலுவலகங்களில் அலுவலர்களால் பின்பற்றப்படாமல் கடவுள் படங்கள், சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது அரசு ஆணை 7553166-2(29.4.1968)க்கு எதிரானது ஆகும்.
இந்த அரசாணையைப் பின்பற்றி அரசு அலுவலகங்களில் உள்ள மத, கடவுள், ஜாதி அடிப்படையிலானவற்றை அகற்றி சமூக நல்லிணக்கத்தைப் பேணிக்காத்திட வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு அரசாணை நகல்