எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (117) பசு வதையும் வேதப் பண்பாடும் – நேயன்

2023 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை மார்ச் 1-15,2023

வேத காலத்தில், பசு வதை’’ இருந்ததா?

வேதப் பண்பாட்டில், பசு புனித மிருகமாகக் கருதப்பட்டதா?
பசு இறைச்சி உட்கொள்ளப்பட்டதா?

இவ்விஷயங்கள், இன்று பெரும் சர்ச்சை-யாகவே மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, இடதுசாரி வரலாற்றாசிரியர்கள், வேத காலத்தில் பசு உண்ணப்பட்டது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது குறித்து அவர்கள் அளிக்கும் ஆதாரங்கள், இரண்டு வகையானவை. ஒன்று, ‘கோகன’ எனும் பதத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனை 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தாராநாத் என்பவர், ‘பசுவைக் கொல்பவர்’ என மொழிபெயர்த்தார். அதாவது, வீட்டுக்கு வரும் மதிப்புக்குரிய விருந்தினர்களுக்குப் பசு மாமிசம் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார். இதுவும், மாட்டு மாமிசம் குறித்துப் பேசும் வேதச் செய்யுள்களும், இடதுசாரிகளின் வாதங்களுக்கு ஆதாரமாக முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், பாரம்பரியமான மொழிபெயர்ப்பில், இதனை ‘பசுவைத் தானமாகப் பெறும் தகுதி உடையவர்’ என்றே பாணினி மொழி பெயர்க்கிறார். அவ்வாறு தகுதி உடையவருக்கு, கோதானம் செய்யும் வழக்கம், பாரதப் பண்பாடு முழுமைக்கும் பரவியிருந்தது என்பதை நாம் பல ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. முக்கியமாக சென்ற நூற்றாண்டில், தமிழகத்தின் முக்கியச் சமுதாயத் தலைவர்களில் ஒருவர், ‘தாத்தா’ எனஅன்புடன் அழைக்கப்பட்ட ரெட்டைமலை ஸ்ரீனிவாசன் ஆவார். பாபாசாஹிப் அம்பேத்கருடன், லண்டன் வட்டமேசை மாநாட்டில், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமை உடையவர்.
அவர் கூறுகிறார்-
“நெட்டாலில் வருளமென்னும் நகரில், முருகன் என்பவர் ஒரு பெரிய பயிர்க் குடியானவராகவும் தனவந்தராகவும் இருந்தார். பிராமணர் யோக்கியம் என்னிடந்தான் அவர் கண்டதாக, என்னை வற்புறுத்தி கோதானம் பெறச் செய்து என் ஆசீர்வாதம் கோரினார்.’’
ஆக இப்பழக்கம், பெருமையும் ஒழுக்கமும் கொண்ட பெரியவர்கள் தங்கள் இல்லங்களுக்கு வருகை தரும்போது, பசுவைத் தானமாக அளிப்பதே அல்லாமல், பசுவைக் கொன்று கறி சமைப்பது அல்ல. இடதுசாரிகள் கொடுக்கும் மற்ற ஆதாரங்களிலும், எருமை அல்லது காளையே கொல்லப்பட்டுள்ளது இருக்கிறதே தவிர, பசு இல்லை. எனவே, மாட்டிறைச்சி சமைத்து உண்ணப்பட்டிருந்தாலும்கூட, பசு கொல்லப்பட்டதற்கு ஆதாரங்கள் எனக் கொடுக்கப்படுபவை, நம்பகத்தன்மை அற்றதாகவே உள்ளன.

மாறாக, வெளிப்படையாகவே பசு கொல்லப்படத்தகாதது என்றே வேதம் கூறுகிறது. கிருஷ்ண யஜுர் வேதத்தில், தைத்திரீய சம்ஹிதை முதல் காண்டம், முதல் பிரச்னம், முதல் அனுவாகத்தில் ஓதப்படும் மந்திரங்களின் கருத்து, பசுக்களின் பண்பாட்டு விவசாய முக்கியத்துவத்தை விளங்குகிறது.

“கொல்லத் தகாதவையான பசுக்களே, நீங்கள் நன்றாகப் புற்களை மேய்ந்து, மடி நிறையப் பால் பெருக்கிக்கொண்டு, தேவபாகத்தை (இந்திரனுக்கு அளிக்கப்பட வேண்டியதாகிய தயிர்) வளர்க்க வேண்டும். அதிகமான ரசமுள்ளதாகவும், பால் நிறைந்தனவாகவும், கன்றுகள் நிறைந்ததாகவும், கிருமிகள் நோய்கள் இல்லாமலும் நீங்கள் இருக்கவேண்டும்.’’

ரிக் வேதத்துக்கு நிருக்தம் எழுதிய யாஸ்கர், பசுவின் ஒன்பது வேதப் பெயர்களை வரிசைப்-படுத்துகிறார். அவற்றுள் முலாவது பெயர், அஹ்ன்யா என்பதாகும். அதாவது, கொல்லத்தகாதது. இரண்டாவது உஸ்ரா _- பால், தயிர் ஆகிய பொருள்களின் விளைவிடம். உஸ்ரியா-_ இன்பத்தை அளிப்பது. மேலும், யாஸ்கர், மஹீ, அதிதி, இளா என அனைத்து வேத பெண் தெய்வங்களின் பெயரையும் பசுவின் பெயராகவே குறிப்பிடுகிறார். வேதப் பண்பாட்டின் தொடக்க மதிப்பீடுகளில் ஒன்றாகவே பசுவதைத் தடையைக் கூறலாம். பசுவை ஏன் கொல்லக்கூடாது என்பதற்கான காரணத்தை, ஒரு வேத மந்திரம் அளிக்கிறது.

“இந்தப் பசு, ருத்திரர்களுக்கு எல்லாம் தாய். வஸுக்களின் பெண். ஆதித்தியர்களின் தங்கை. அமுதத்தின் இருப்பிடம். அறிவுடையவனுக்குச் சொல்கிறேன், குற்றமற்றதும் பெருந்தன்மை கொண்டதுமான பசுவைக் கொல்லாதீர்கள்.’’
(ரிக், 8.101.15)

தைத்ரீய சம்ஹிதையில், பசுக்களைப் பாதுகாக்கும் பணி தனக்கே இருக்க வேண்டுமென ருத்ரன் கருதுவதாகக் கூறப்படுகிறது. ருத்ரனின் பெயர், ‘அஹ்ன்யானாம்பதி’ என்பதாகும். பசு, வேளாண்மைக்கு மையமாக மட்டுமல்ல, ஒரு பிரபஞ்சத் தாயாகவும் கருதப்பட்டது என்பதை இது காட்டுகிறது. அனைத்து தெய்வங்களின் உறைவிடமாகக் காட்டப்படும் பசுவின் சித்திரம்-_ இன்று நாம் காலண்டரில் காணும் கோமாதா(காமதேனு) வேத இலக்கியத்தில் வேர் கொண்ட ஒன்றுதான்.

அனைத்து உயிர்களின் இறைத் தன்மையை மதிக்கும் ஒரு குறியீடாகவும், வேதப் பண்பாட்டில் இருந்து பசு வழிபாடு பரிணமித்து நமக்கு வந்துள்ளது. மார்வின் ஹாரிஸ் போன்ற மார்க்சிய மானுடவியலாளர்கள்கூட, ஹிந்துக்களின் பசு வணக்கம், எத்தகைய முக்கிய சூழலியல்_ பொருளாதாரப் பொருள் கொண்ட ஒன்றாக அமைந்-துள்ளது எனக் கூறியுள்ளனர்.’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.
இவர் கூறியவை சரியா என்று இனி பார்ப்போம்.

முதலில் ஆரியர்கள் பசு இறைச்சி உண்டது பற்றி அம்பேத்கர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
“ரிக் வேத ஆரியர்கள் உணவுக்காக பசுக்களைக் கொன்று மாட்டின் இறைச்சியை ஏராளமாக உண்டனர் என்பது ரிக் வேதத்திலிருந்தே மிகத் தெளிவாகத் தெரிகிறது. ரிக் வேதத்தில் ((X. 86.14) இந்திரன் சொல்கிறான்: அவர்கள் ஒருவருக்காக 15க்கு மேல் 20 காளைகளை சமைக்கிறார்கள். ரிக் வேதம் ((X. 91.14), “அக்கினிக்காக குதிரைகள், காளைகள், எருதுகள், மலட்டுப் பசுக்கள் மற்றும் ஆட்டுக்கடாக்கள் பலியிடப்பட்டன. ரிக் வேதம் ((X. 72.6)லிருந்து, பசுக்கள் வாள் அல்லது கோடரியைக் கொண்டு கொல்லப்பட்டன என்பது அறியப்படுகின்றது.

‘ஆபஸ்தம்ப தர்மசூத்திரம்’ நூலிலுள்ள கூற்றுக்கு எதிராக கீழ்க்கண்ட கருத்துகள் கவனிக்கப்பட வேண்டும்.
முதலாவதாக, அதே சூத்திரத்தில் 1.5, 14, 29இல் அடங்கியுள்ள முரணான ஒரு கூற்று சொல்கிறது:

“பசுவும் காளையும் புனிதமானவை; ஆகவே அவை உட்கொள்ளப்பட வேண்டும்.”
மதுபர்க்கம் இறைச்சி இல்லாமல் இருக்கக் கூடாது; பசு விடப்பட்டு விட்டால் வெள்ளாட்டு இறைச்சி அல்லது பாலில் சமைத்த சோறு (பாயசம்) படைக்கப்படலாம் என வேதம் அறிவிக்கின்றது என்று மத்வ (சாஸ்திரம்) 1.9.22 கூறுகிறது. இறைச்சி இல்லாமல் மதுபர்க்கம் இருக்கக் கூடாது; எனவே, பசு விடப்பட்டு விட்டால் வெள்ளாடு அல்லது ஆட்டுக்கடா அல்லது ஏதாவது (மான் முதலிய) காட்டு விலங்கின் இறைச்சி படைக்கப்படலாம் என்று பிவீக்ஷீ.ரீக்ஷீ. (1.2,51-_54) கூறுகிறது. ஒருவனால் இறைச்சியைப் படைக்க இயலாத நிலையில், அரைக்கப்பட்ட தானியங்களைச் சமைக்கலாம்.

ஆக, மதுபர்க்கத்தின் முக்கிய பாகமாக இறைச்சி, அதுவும் குறிப்பாக பசுவின் இறைச்சி உள்ளது.

விருந்தினர்களுக்காக பசுவைக் கொல்லுவது மிகவும் அதிகரித்து விட்டதால், விருந்தினர்கள் ‘கோக்னா’, அதாவது ’பசுவைக் கொல்பவர்’ என அழைக்கப்படும் வழக்கம் ஏற்பட்டது.

இந்துக்கள் பசுக்களைக் கொன்று அதன் இறைச்சியை உண்டனர் என்பதை, வேதங்கள் மற்றும் பிராமணர்களுக்கு மிகவும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த புத்த மத சூத்திரங்களில் பல இடங்களில் காணப்படும் யாகங்களைக் குறித்த வர்ணனைகள் மிகவும் நன்றாக மெய்ப்படுத்துகின்றன.

பசுக்களும் பிற விலங்குகளும் பிரம்மாண்ட-மான அளவில் ஏராளமாக கொல்லப்பட்டன. ஒவ்வொரு சமயத்திலும் மதத்தின் பெயரால் பிராமணர்கள் எத்தனை பசுக்களைக் கொன்றனர் என்பதைக் கூறுவது இயலாத ஒன்று. இந்த நிகழ்வுகளைக் குறிப்பிடும் புத்த மத நூல்களில் கிடைக்கின்ற மேற்கோள்களைக் கொண்டு ஓரளவுக்கு இந்தப் படுகொலைகளைக் குறித்து அறிந்துகொள்ள முடியும். கூடதண்ட சுத்தாவில் உள்ள, விலங்குகளைப் பலியிடுவது கூடாது என்று கூடதண்ட பிராமணனுக்கு, புத்தர் போதித்த அறிவுரையை ஒரு நல்ல மேற்கோளாகச் சுட்டிக்காட்ட முடியும்.’’

(தொடரும்)
ஆதாரம்: The Untouchables- Dr.B.R. Ambedkar)