பளீர்

ஏப்ரல் 01-15

ஜெ.யின் சொத்துக் குவிப்பு வழக்கு

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது.  ஆவணங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குத் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.  சரிசெய்ய கால ஆவகாசம் கொடுக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பினர் முறையிட்டனர்.

தனி நீதிமன்றம் இதனை நிராகரித்ததால் கருநாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, 25 நாள்கள் கால அவகாசம் கொடுத்துள்ளதோடு,  313 ஆவது விதியின்கீழ் தனி நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் என்றும் ஆணையிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *