Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை இராமச்சந்திரனார்

(நினைவு நாள்: பிப்ரவரி – 26)

தோழர் ராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும், மனதில் உள்ளதை சிறிதும் எவ்வித தாட்சண்யத்திக்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது என்பது மிக மிக அரிதேயாகும்.
பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்காக என்ற கிளர்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் வீறு கொண்டிருந்த காலத்தில் தோழர் ராமச்சந்திரன் அவர்கள் தாலுகா போர்டு முதலிய பல ஸ்தாபனங்களில் தலைவராய் இருந்த சமயம், ஒருபொதுக் கூட்டத்தில் பேசும்போது, இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுப்பதில்லை என்று ஒரு உறுதிமொழி கூறி, அதை ஒரு விரதமாய் கொண்டிருப்பதாக விளம்பரப்படுத்தினார்.
– தந்தை பெரியார்