வி.சி.வில்வம்
தமிழ்நாடு தனித்தன்மையோடு இருப்பதற்குத் திராவிடர் இயக்கக் கொள்கை
களே காரணம்! கல்வி, மருத்துவம், சுகாதாரம் எனச் சிறந்த கட்டமைப்பைக் கொண்டது தமிழ்நாடு!
உலகம் முழுவதும் மிகப் பெரிய பொறுப்புகளில், பணிகளில், பதவிகளில் தமிழர்கள் இன்று கொடிகட்டிப் பறக்-கிறார்கள்! வெளிநாட்டு மக்களுடன் இணைந்து பணியாற்றுவதும், அவர்களின் வாழ்வியல் முறைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதும் இயல்பான காரியம் அல்ல! ஆனால் தமிழர்களுக்கு அது சாத்தியமாகி இருக்கிறது!
இதற்குக் காரணம் திராவிடர் இயக்கக் கொள்கை ஏற்படுத்திக் கொடுத்த கல்வி, பெற்றுத் தந்த வேலை! உலகம் முழுவதும் மருத்துவர்களாய், ஆராய்ச்சியாளர்களாய், தகவல் தொழில் நுட்பத் துறையின் வல்லுநர்களாய், தொழில் அதிபர்களாய் பல்முனைகளிலும் தத்தம் தனித்திறனை உலகுக்கு வழங்கி வருகின்றனர்!
அண்மையில், சிங்கப்பூர்,ஓமான், பிரிட்டன், நார்வே, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடு-களிலிருந்தும் அயலக வாழ் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்கள் ஒன்று கூடல் நிகழ்வு 2022 டிசம்பர் 22 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. வெளிநாட்டுத் தோழர்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழ்
நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மருத்துவர்கள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பேராசிரி-யர்கள், வழக்குரைஞர்கள், அரசியல் ஆய்வாளர்கள், “யூடியூப்” இயக்குநர்கள் என எண்ணற்றோர் குழுமியிருந்தனர்!
இந்நிகழ்ச்சி மேடை, பார்வையாளர்கள் என்கிற வடிவத்தில் இல்லாமல், வட்ட மேஜை அமைப்பில் அமைக்கப்பட்டிருந்தது!
தமிழர்களின் பாதுகாவல் அரண் பெரியார் திடலையும், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்
களைச் சந்திக்கும் பொருட்டும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது!
பங்கேற்ற அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டதுடன், ஓரிரு நிமிடங்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். இறுதியாகத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து பலரின் கேள்விகளுக்கு வரலாற்று ரீதியாகவும், நடைமுறையை ஒட்டியும், நகைச்சுவை இணைத்தும் பதில் அளித்தார்!
சிறுவராக இயக்கப் பணியைத் தொடங்கி, படிப்படியாக பொறுப்புகளில் உயர்ந்து இன்று மாபெரும் தலைவராக இருப்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! 90 வயதில் 80 ஆண்டுகள் தமிழ்நாட்டோடு பின்னிப் பிணைந்தது அவர்களின் வாழ்க்கை!
எத்தனையோ போராட்டங்கள், சிறை வாழ்க்கைகள், எண்ணில் அடங்கா பயணங்கள், எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் அவர்தம் பேச்சுகள் என வரலாற்றுச் சிறப்பாம்சம் கொண்டது ஆசிரியரின் வாழ்க்கை! இவை தவிர, குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், இந்திய மாநிலங்கள் முழுவதிலும் உள்ள சமூக நீதித் தலைவர்கள் என அனைவரோடும் இணைந்து, இணைத்து ஓடிக் கொண்டே இருக்கிறது ஆசிரியரின் பெரும் பயணம்!
இவ்வளவு சிறப்புமிக்க ஒரு தலைவருடன் அருகருகே அமர்ந்து, ஒரு வீட்டு நிகழ்வு போல, மிக இயல்பாகப் பேசிக் கொண்டதும், சந்தித்துக் கொண்டதும் தோழர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்வையும், உள்ளக் கிளர்ச்சியையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையன்று!
“வெளிநாட்டுத் தோழர்கள் குடும்பம், குடும்பமாகப் பெரியார் திடல் வந்து, ஒருநாள் முழுக்க பெரியாரோடும், ஆசிரிய
ரோடும் இருக்க வேண்டும் என்றும் , அதுதான் எங்கள் அடுத்த தலைமுறைக்
கும் வழிகாட்டும்“ என்கிற பெரு விருப்பத்
தோடும் அன்றைய ஒன்றுகூடல் நிறைவு
பெற்றது!