1942ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்
போர்டு நகரில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார். உலக அளவில் பெரும் புகழ்பெற்ற “எ பிரிஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’’ (A Brief History of Time) என்னும் நூலை இவர் எழுதினார். இவர் பதின்மூன்று கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். 1982இல் ஆங்கிலேய அரசாங்கத்தால் சி.பி.இ. பட்டமும், 1989இல் கம்பேனியன் ஆஃப் ஆனர் (Campanian of Honor) பட்டமும், 2009இல் ‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃபிரீடம்’ (Presidential Medal of Freedom) பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டன. இவர் பிரிட்டனின் ‘ராயல் சொசைட்டி’ அமைப்பிலும் அமெரிக்க அறிவியல் கழகத்திலும் உறுப்பினராக இருந்தார். 1963இல் இவருக்கு இயக்க நரம்பணு நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 21; அது முதல் சக்கர நாற்காலியில் முடங்கிக்
கிடந்த நிலையிலும் தன் இயற்பியல் ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார். அய்ன்ஸ்டீனுக்குப் பிறகு இவ்வுலகு கண்ட மிகச்சிறந்த கோட்பாட்டு இயற்பியலாளராகக் கருதப்படும் இவர் 2018ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14ஆம் நாள் தன்னுடைய
76ஆம் வயதில் இயற்கையெய்தினார்.